முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » காழ்கொள்ளுதல் முதல் - காற்கொட்டை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - காழ்கொள்ளுதல் முதல் - காற்கொட்டை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| காற்குளம் | பூசநாள் . |
| காற்கொட்டை | காலுக்கிடும் திண்டு |
| காழூன்றுகடிகை | குத்துக்கோல் ; கூடாரம் . |
| காழோர் | குத்துக்கோலுடைய யானைப்பாகர் . |
| காளகண்டம் | குயில் ; மயில் ; கரிக்குருவி ; ஊர்க்குருவி ; வேங்கைமரம் . |
| காளகண்டன் | கறுத்த கழுத்துடைய சிவன் . |
| காளகண்டி | துர்க்கை ; ஒருகெட்ட நாள் . |
| காளகம் | சேங்கொட்டை ; மருக்காரைச் செடி ; எக்காளம் ; கருமை . |
| காளகூடம் | ஆலகாலம் , நஞ்சு ; ஒரு நரகம் . |
| காளச்சிலை | வைடூரியம் . |
| காளசுந்தரி | கறுத்த கழுத்தையுடைய பார்வதி . |
| காளபதம் | மாடப்புறா . |
| காளபந்தம் | ஒரு விளக்கு . |
| காளபம் | போர் . |
| காளம் | கருமை ; நஞ்சு ; பாம்பு ; எட்டிமரம் ; மேகம் ; நல்வினைக்கு காரணமான பெருமழை ; கழு ; ஊதுகொம்பு ; அவுரிப்பூண்டு ; சூலம் ; சக்கரப்படை . |
| காளமுகி | கல்மழையைப் பொழியும் மேகம் . |
| காளமேகம் | கரு மேகம் ; ஒரு புலவன் . |
| காளயுக்தி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்திரண்டாம் ஆண்டு . |
| காளவனம் | சுடுகாடு . |
| காளவாய் | கழுதை ; செங்கல் சுண்ணாம்பு சுடும் சூளை . |
| காளவாய்க் கல் | சுட்ட புதுச்செங்கல் . |
| காளவாயன் | உரக்கக் கத்துபவன் . |
| காளவிளக்கு | திருவிழா முதலிய சிறப்புக் காலங்களில் பயன்படுத்தும் பெருவிளக்கு . |
| காளாஞ்சி | தாம்பூலப்பெட்டி ; தாம்பூலம் துப்பும் கலம் , வாதநோய்வகை . |
| காளாத்திரி | பாம்பின் நான்கு நச்சுப் பற்களுள் ஒன்று . |
| காளாம்பி | நாய்க்குடை . |
| காளான் | நாய்க்குடை . |
| காளி | துர்க்கை: பார்வதி ; சிங்கம் ; கரியவள் ; வாயுமூர்த்தியான காளரின் சக்தி ; பதினெட்டு உபபுராணத்துள் ஒன்று ; பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று ; மணித்தக்காளி ; எட்டி ; காட்டுமுருக்கு ; கக்கரி . |
| காளிக்கங் கட்டுதல் | கருஞ்சாயங் கூட்டுதல் . |
| காளிக்கம் | ஒருவித நீலச்சாயம் ; செப்புத்தாது உள்ள மலை . |
| காளிக்கமெழுதுதல் | சீலைத்துணியில் கருஞ்சாய ரேகை எழுதுதல் . |
| காளிகம் | மணித்தக்காளிச் செடி ; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று . |
| காளிங்கமர்த்தனன் | காளிங்கன் என்னும் நாகத்தின்மீது பாதங்களை வைத்து ஆடித்துவைத்த கண்ணபிரான் . |
| காளிங்கராயன் | தமிழ்மன்னர்களால் அரசாங்கத் தலைவர் சிலருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர் ; கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று . |
| காளித்தனம் | மூர்க்கத்தனம் . |
| காளிதம் | களிம்பு ; கறுப்பு . |
| காளிந்தம் | ஏலம் ; பாம்பு . |
| காளிந்தி | யமுனையாறு ; வாகை ; தேக்கு . |
| காளிப்பணம் | 3 அணா 4 பைசா கொண்ட பழைய நாணயம் . |
| காளிமம் | காண்க : காளிதம் . |
| காளிமை | காண்க : காளிதம் . |
| காளியன் | கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்தாடப்பெற்ற பாம்பு . |
| காளினியம் | கத்தரிச்செடி . |
| காளை | இளவெருது ; எருது ; கட்டிளமைப்பருவத்தினன் ; ஆண்மகன் ; பாலைநிலத்தலைவன் ; வீரன் . |
| காளைக்கன்று | ஆவின் ஆண்கன்று . |
| காளைமாடு | எருது . |
| காளையங்கம் | போர் . |
| காளையம் | போர் ஆரவாரம் . |
| காற்கட்டு | தடை ; கலியாணம் . |
| காற்கடுப்பு | கால் உளைச்சல் . |
| காற்கடைகொள்ளுதல் | புறக்கணித்தல் , அலட்சியம் பண்ணுதல் . |
| காற்கவசம் | மிதியடி , பாதரட்சை . |
| காற்காந்தல் | காற்புண் . |
| காற்காப்பு | காலில் அணியும் காப்பு . |
| காற்காறை | தெய்வத் திருமேனியின் பாதங்களிற் சாத்தும் அணிகலன் . |
| காற்குடைச்சல் | காலுளைவு . |
| காற்குப்பாயம் | காற்சட்டை . |
| காழ்கொள்ளுதல் | முதிர்தல் . |
| காழ்கோளி | நெட்டிலிங்கம் . |
| காழ்த்தல் | முற்றுதல் ; மனவயிரங்கொள்ளுதல் ; அளவுகடந்து மிகுதல் ; உறைத்தல் . |
| காழ்ப்பு | உறைப்பு ; வயிரம் ; மனவயிரம் ; தழும்பு ; சாரம் . |
| காழ்வை | அகில் . |
| காழகம் | கடாரம் ; ஆடை ; கைக்கவசம் ; கருமை . |
| காழம் | உடை விசேடம் . |
| காழி | உறுதி ; சீகாழி . |
| காழியர்கோன் | திருஞானசம்பந்தர் . |
| காழியன் | பிட்டுவாணிகன் ; உப்புவாணிகன் ; வண்ணான் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 319 | 320 | 321 | 322 | 323 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காழ்கொள்ளுதல் முதல் - காற்கொட்டை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, பாம்பு, காளிதம், போர், மேகம், கருமை, கண்ணபிரான், நாய்க்குடை, துர்க்கை, காண்க, எருது, செடி, பற்களுள், நஞ்சு, கறுத்த, பாம்பின், நச்சுப், பார்வதி

