தமிழ் - தமிழ் அகரமுதலி - காரியப்பாடு முதல் - கால்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கால்கோள் | தொடக்கம் ; போரில் இறந்த வீரனுருவைக் கல்லில் வகுக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை . |
| கால்சாய்தல் | அடியோடழிதல் . |
| கால்சீத்தல் | காலினால் கீறுதல் ; வேரோடு களைதல் . |
| கால்செய்வட்டம் | விசிறி , பேராலவட்டம் . |
| கால்தடுக்குதல் | அடியிடறுதல் . |
| கால்தல் | வெளிப்படுதல் ; குதித்தல் ; கக்குதல் ; தோற்றுவித்தல் . |
| காரியவாகுபெயர் | காரியம் காரணத்திற்கு ஆகும் பெயர்ச்சொல் . |
| காரியவாதி | தன் செயலைச் சாதித்துக்கொள்பவன் . |
| காரியவான் | திறமையுடையவன் . |
| காரியவிலக்கணை | காரியத்தைக் காரணமாக உபசரித்தல் . |
| காரிரத்தம் | ஆடுதின்னாப்பாளைச்செடி . |
| காரிருள் | மிக்க இருள் . |
| காரிழை நாதம் | கந்தகம் . |
| காரீயம் | கருநிறமான ஈயவகை . |
| காரு | வண்ணான் ; கம்மாளன் ; கம்மத்தொழில் . |
| காருகத்தம் | இல்லறநிலை . |
| காருகத்தியம் | இல்லறநிலை . |
| காருகத்தொழில் | நெய்யுந்தொழில் . |
| காருகம் | நெய்யுந்தொழில் ; ஊழிய வேலை ; இல்லறம் ; நெருப்பை வணங்குஞ் சமயம் . |
| காருகவடி | கோள்நிலை . |
| காருகன் | நெய்வோன் ; வண்ணான் ; ஓவியன் ; கொலையாளன் . |
| காருச்சிவல் | கடற்பாசி , கடற்காளான் . |
| காருடம் | கருடன் ; கருடசமூகம் ; அறுபத்து நாலு கலையுள் நஞ்சு தீர்க்கும் வித்தை ; ஓர் உபநிடதம் ; கருடபுராணம் ; பச்சைக்கல் ; மருக்காரைச் செடி ; காருடவித்தை . |
| காரூடம் | கருடன் ; கருடசமூகம் ; அறுபத்து நாலு கலையுள் நஞ்சு தீர்க்கும் வித்தை ; ஓர் உபநிடதம் ; கருடபுராணம் ; பச்சைக்கல் ; மருக்காரைச் செடி ; காருடவித்தை . |
| காருடயூகம் | கருட வடிவாக அமைக்கும் ஒரு படைவகுப்பு . |
| காருடவித்தை | நஞ்சு வைத்தியம் ; சாலவித்தை . |
| காருடன் | சாலவித்தைக்காரன் . |
| காருண்ணியம் | அருள் , கருணை . |
| காருண்யமேகம் | மேகம்போற் கைம்மாறு எதிர்பாராது உதவி செய்பவன் . |
| காருணி | வானம்பாடி . |
| காருணிகன் | கருணையுள்ளவன் , அருளுடையோன் . |
| காருணியம் | காண்க : காருண்ணியம் . |
| காருவாகன் | வண்ணான் . |
| காரூகம் | கருங்குரங்கு . |
| காரெலி | கறுப்பெலி . |
| காரெள் | எள்ளின்வகை . |
| காரெனல் | ஒளி மழுங்குதற் குறிப்பு ; கருநிற மாகை . |
| காரேறு | கரிய எருமைக்கடா . |
| காரை | காட்டுச்செடிவகை ; மருக்காரை ; காறல்மீன் ; ஆடை ; சுண்ணச்சாந்து ; பல்லில் இறுகப்பற்றிய ஊத்தை . |
| காரைக்கட்டுவீடு | சுண்ணாம்பு செங்கற்களால் கட்டப்பட்ட வீடு . |
| காரோடன் | சாணைக்கல் செய்வோன் ; ஆயுதவுறை செய்வோன் . |
| கால் | நாலில் ஒன்று ; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும் 'வ' என்னும் பின்ன எண்குறி ; பாதம் ; பூவின் தாள் ; அடிப்பாகம் ; எழுத்தின் கால் ; தேருருள் ; வண்டி ; கோல் ; குறுந்தறி ; நெசவுத்தறியின் மிதி ; கைப்பிடி ; தூண் ; பற்றுக்கோடு ; முளை ; மரக்கன்று ; மகன் ; இனமுறை ; பிறப்பிடம் ; வாய்க்கால் ; பிரிவு ; வழி ; நடை ; இடம் ; வனம் ; முனை ; மரக்கால் ; அளவு ; கதிர் ; மழைக்கால் ; காற்று ; வாதரோகம் ; ஐம்பூதம் ; பொழுது ; செவ்வி ; தடவை ; காலன் ; கருநிறம் ; ஏழனுருபுள் ஒன்று ; ஒரு வினையெச்ச விகுதி ; ஒரு முன்னொட்டு . |
| கால்கடியன் | வல்லவன் , தீரன் , திறனுடையவன் . |
| கால்கடுத்தல் | பாதம் நோதல் . |
| கால்கழி கட்டில் | பாடை . |
| கால்கழுவுதல் | கால்கழுவ நீர்கொடுத்து உபசரித்தல் ; மலங்கழுவுதல் . |
| கால்கிளர்தல் | ஓடுதல் ; படையெடுத்துச் செல்லுதல் . |
| கால்கூசுதல் | பிறவிடஞ் செல்ல மனங்கூசுதல் . |
| கால்கெஞ்சுதல் | அடி வருந்துதல் . |
| கால்கைப்பிடிப்பு | வாதநோய் . |
| கால்கொள்ளுதல் | திருவிழா முதலியவற்றுக்குத் தொடக்கஞ் செய்தல் ; தொடங்குதல் ; இடங்கொள்ளுதல் ; ஏறச்செய்தல் ; ஆரோகணஞ்செய்தல் ; பெருக்கெடுத்தல் . |
| காரியப்பாடு | பயன் . |
| காரியப்பொறுப்பு | தொழிலை நிறைவேற்றுங்கடமை . |
| காரியபாகம் | செயல் கைகூடுதல் . |
| காரியம் | செயல் , செய்கை ; காரணத்தால் ஆவது ; செய்யத்தக்கது ; நோக்கம் ; இறுதிக்கடன் ; சாணம் . |
| காரியமாயை | மூலப் பிரகிருதி . |
| காரியமுற்றுதல் | எடுத்த செயல் கைகடந்து போதல் . |
| காரியமுன்னிடுதல் | எடுத்த செயல் கைகூடுகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 314 | 315 | 316 | 317 | 318 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரியப்பாடு முதல் - கால்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செயல், நஞ்சு, காருடவித்தை, வண்ணான், செடி, மருக்காரைச், காருண்ணியம், பச்சைக்கல், கால், எடுத்த, பாதம், ஒன்று, கருடபுராணம், செய்வோன், வித்தை, கருடன், நெய்யுந்தொழில், இல்லறநிலை, உபசரித்தல், கருடசமூகம், அறுபத்து, காரியம், தீர்க்கும், கலையுள், நாலு, உபநிடதம்

