தமிழ் - தமிழ் அகரமுதலி - கலை முதல் - கவணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கவடி | வெள்வரகு , பலகறை ; ஒருவகை விளையாட்டு ; கபடமுள்ளவர் ; தகரம் ; படிக்காரம் . |
| கவடு | மரக்கிளை ; கவருள்ள மரக்கிளை ; இடைச்சந்து ; ஓரளவை ; யானைக் கழுத்தில் கட்டும் கயிறு ; கபடம் ; உட்பிரிவு . |
| கவடுதாக்கி | அடிவைப்பு . |
| கவடுபடுதல் | யாழ்ப்பத்தர்போல இருபுறமும் தாழ்ந்து நடுவுயர்தல் ; பிரிவுபடுதல் . |
| கவடுவட்டம் | முத்துவகைகளுள் ஒன்று . |
| கவடுவைத்தல் | எட்டி நடத்தல் . |
| கவண் | கல்லெறியும் கருவி . |
| கவண்கல் | கவணில் வைத்து எறியுங்கல் . |
| கவண்டன் | காண்க : கவுண்டன் . |
| கவண்டி | கவண் . |
| கவண்டு | கவண் . |
| கவணம் | அடிபட்ட காயக்கட்டு . |
| கலை | கூறு ; சந்திரனது பதினாறு கூறுகளுள் ஒன்று ; ஒளி ; எட்டு விநாடி அல்லது முப்பது காட்டை கொண்ட ஒரு காலநுட்பம் ; அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்று ; கல்வி ; சாத்திரம் ; மொழி ; சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்று ; உடல் ; புணர்ச்சிக்குரிய காரணங்கள் ; ஆண்மான் ; ஆண்குரங்கு ; அரைப்பட்டிகை ; மேகலை என்னும் அணி ; ஆடை ; நூல் ; மரவைரம் ; மகரமீன் ; மகரராசி . |
| கலைக்கணாளர் | அமைச்சர் . |
| கலைக்களஞ்சியம் | அகரவரிசையில் கலைகளைப் பற்றிக் கூறும் தொகுப்பு நூல் . |
| கலைகுறைதல் | தெய்வ ஆற்றல் குறைதல் ; அழகு கெடுதல் . |
| கலைச்சாலை | கல்லூரி , கல்விச்சாலை . |
| கலைஞன் | கலைகளில் வல்லவன் , கல்விமான் . |
| கலைஞானம் | நூலறிவு ; அறுபத்துநான்கு கலை . |
| கலைஞானி | நூலுணர்ந்தோன் , சாத்திரமறிந்தவன் . |
| கலைத்தல் | குலைத்தல் ; நீக்கல் , பிரித்தல் ; பிரித்து நீக்குதல் ; மனத்தைக் கலைத்தல் ; ஓட்டுதல் ; கூட்டம் முதலியவற்றைக் கலைத்தல் . |
| கலைத்தொழில் | யாழ் மீட்டற்குரிய செய்கைகள் . |
| கலைத்தொழில் எட்டு | யாழில் இசை எழுப்புவதற்கு ஏதுவாகிய எண்வகைக் கலைத் தொழில்கள் ; அவை : பண்ணல் , பரிவட்டணை , ஆராய்தல் , தைவரல் , செலவு , விளையாட்டு , கையூழ் , குறும்போக்கு . |
| கலைதல் | குலைதல் ; அழிதல் ; நிலைகெடுதல் ; சுருதி குலைதல் , பண் மயங்கல் . |
| கலைநாதன் | புத்தன் . |
| கலைநாயகன் | புத்தன் . |
| கலைநியமம் | கலைமகள் கோயில் , மதுரையில் இருந்த சிந்தாதேவி கோயில் . |
| கலைப்பாகி | கலையூர்தியுடைய துர்க்கை ; கல்வித் தலைவியாகிய கலைமகள் . |
| கலைமகள் | கலைமகள் , நாமகள் , சரசுவதி . |
| கலைமடந்தை | கலைமகள் , நாமகள் , சரசுவதி . |
| கலைமலைவு | கீதம் , கணிதம் முதலிய கலைநூல்களிற் கூறபட்டவற்றோடு மாறுபடவருவது . |
| கலைமான் | ஆண்மான் ; மான்வகை ; கலைமகள் . |
| கலையறிபுலவன் | முருகக் கடவுள் . |
| கலையானத்தி | துர்க்கை , கலையூர்தி . |
| கலையினன் | சந்திரன் . |
| கலையுருவினோன் | கலைகளை உருவாகவுடைய சிவன் . |
| கலையூர்தி | காண்க : கலைப்பாகி . |
| கலையேறுதல் | தெய்வ ஆற்றல் மிகுதல் ; செருக்கடைதல் . |
| கலையோன் | சந்திரன் . |
| கலைவல்லார் | புலவர் ; கலைஞர் ; பரத்தையர் . |
| கலைவாகன் | வாயு . |
| கலைவாணர் | புலவர் ; கலைவல்லோர் . |
| கலைவாணி | கலைமகள் . |
| கவ்வம் | மத்து ; மாட்டுச் சுழிவகை . |
| கவ்வரணம் | குறிஞ்சியாழ்த் திறங்களுள் ஒன்று . |
| கவ்வியம் | பசுவினின்று கொள்ளப்படும் ஐந்து பொருள்கள் ; பிதிரர்களை எண்ணிக் கொடுக்கும் பிண்டம் . |
| கவ்வு | வாயால் கவ்வுகை ; தின்கை ; கவட்டை . |
| கவ்வுதல் | வாயினாற் பற்றுதல் ; கவர்தல் ; சுமத்தல் ; வௌவுதல் . |
| கவ்வை | ஒலி ; பழிச்சொல் ; துன்பம் ; கவலை ; பொறாமை ; கள் ; செயல் ; எள்ளிளங்காய் ; ஆயிலியம் . |
| கவ்வை பார்த்தல் | வேலைபார்த்தல் . |
| கவசம் | மெய்புகு கருவி , உடற்பாதுகாப்பு உறை , இரட்சை , இரும்பு முதலியவற்றாற் செய்த சட்டை ; சீலைமண் ; இரட்சை உண்டாக்குவதாய் உள்ள ஒரு மந்திரம் ; காயத்திற்கிடும் கட்டு . |
| கவசித்தல் | சீலைமண் செய்தல் . |
| கவட்டடி | எட்டிவைக்கும் ஓர் அடி ; ஆண்குறி ; பெண்குறி . |
| கவட்டன் | வஞ்சகன் . |
| கவட்டுதல் | வளைத்தல் . |
| கவட்டை | கவர் , மரக்கிளையின் கவர் . |
| கவடம் | வஞ்சனை , விரகு . |
| கவடாவீடு | களஞ்சியம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 284 | 285 | 286 | 287 | 288 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலை முதல் - கவணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கலைமகள், ஒன்று, கலைத்தல், கவண், நாமகள், சரசுவதி, கலைப்பாகி, கலையூர்தி, துர்க்கை, புலவர், சீலைமண், கவர், இரட்சை, கவ்வை, கோயில், கவட்டை, சந்திரன், குலைதல், எட்டு, அறுபத்துநான்கு, காண்க, கருவி, மரக்கிளை, ஆண்மான், நூல், விளையாட்டு, கலைத்தொழில், ஆற்றல், தெய்வ, புத்தன்

