முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கருடக்கை முதல் - கருத்தெடுத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கருடக்கை முதல் - கருத்தெடுத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கருடன் | வைனதேயன் ; திருமால் வாகனம் ; பருந்துவகை ; கொல்லங்கோவைச் செடி . |
| கருடன் கிழங்கு | பெருமருந்து . |
| கருடாசனம் | யோகாசனவகை . |
| கருடாரூடன் | கருடன்மேல் வீற்றிருக்குந்திருமால் . |
| கருடி | சிலம்பம் ; கரடிக்கூடம் . |
| கருடிவித்தை | காண்க : கரடிவித்தை . |
| கருடுதல் | விரும்புதல் . |
| கருடோற்காரம் | மரகதவகை . |
| கருடோற்சவம் | திருமால் கருடாரூடராய்க் காட்சி கொடுக்கும் திருநாள் . |
| கருணம் | எலுமிச்சைமரம் ; காது . |
| கருணமல்லி | முல்லை . |
| கருணன் | அருளுடையவன் ; கர்ணன் ; கும்பகர்ணன் . |
| கருணா | ஒருவகை வாச்சியம் ; கருணை ; பாவனை ஐந்தனுள் ஒன்றான அருள் . |
| கருணாகடாட்சம் | அருள்நோக்கு , கருணையோடு கூடிய கடைக்கண் பார்வை . |
| கருணாகரன் | அருளுக்கு இருப்பிடமான கடவுள் . |
| கருணாநிதி | அருட்செல்வன் , கடவுள் . |
| கருணாபாவனை | வறியவர்கள் வறுமை நீங்கிச் செல்வமுடையவர்களாகுக என்று பாவித்தல் . |
| கருணாமூர்த்தி | அருள் உருவான கடவுள் . |
| கருணி | மலை ; குகை . |
| கருணிகை | தாமரைக்கொட்டை . |
| கருணீகம் | ஊர்க் கணக்குவேலை . |
| கருணீகன் | ஊர்க்கணக்கன் ; கணக்குவேலை பார்க்கும் ஒரு சாதி . |
| கருணை | அருள் , தயவு , இரக்கம் , ஒரு கிழங்கு ; ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய அவலச்சுவை . |
| கருணைமறம் | அருளாற் செய்யும் தண்டனை . |
| கருத்தபம் | காண்க : கர்த்தபம் . |
| கருத்தமம் | சேறு . |
| கருத்தரங்கு | கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் மேடை . |
| கருத்தரித்தல் | கருத்தங்கல் , சினையாதல் , சூல்கொள்ளுதல் . |
| கருத்தவ்வியம் | செய்யத்தக்கது . |
| கருத்தளவு | அனுமானப் பிரமாணம் . |
| கருத்தளவை | அனுமானப் பிரமாணம் . |
| கருத்தா | செய்வோன் ; தலைவன் ; கடவுள் . |
| கருத்தன் | செய்வோன் ; தலைவன் ; கடவுள் . |
| கருத்தாவாகுபெயர் | கருத்தாவின் பெயரைக் காரியத்திற்கு வழங்குதல் . |
| கருத்தாளி | புத்திசாலி , கருத்துள்ளவன் . |
| கருத்து | நோக்கம் , தாற்பரியம் , கொள்கை , எண்ணம் , விருப்பம் , சொற்பொருள் , கவனம் , இச்சை , விவேகம் , சம்மதம் , மனம் , பயன் , சங்கற்பம் , தன்மதிப்பு . |
| கருத்துக்கொள்ளுதல் | நோக்கமுறுதல் , மனம் வைத்தல் . |
| கருத்துடையடை | அபிப்பிராயத்தோடு கூடிய விசேடணத்தை உடையதாகிய அணி . |
| கருத்துடையடைகொளி | அபிப்பிராயத்தோடு கூடிய விசேடியத்தை உடையதாகிய அணி . |
| கருத்துப்பிசகு | தவறான கருத்து , தப்புரை . |
| கருத்துப்பிரிதல் | மனத்து உதித்தல் ; கருத்து விளங்குதல் . |
| கருத்துப்பொருள் | மனத்தாலே கருதப்பட்ட பொருள் . |
| கருத்துரை | தாற்பரியம் , செய்யுட் கருத்துரைக்கு முரை , உட்பொருள் . |
| கருத்தெடுத்தல் | சூழ்ச்சி செய்தல் ; உட்கருத்தறிதல் , உள்ளவுண்மையை உணர்ந்தறிதல் . |
| கருடக்கை | நின்று வணங்குதலைக் காட்டும் இணைக்கைவகை . |
| கருடக்கொடி | கருடன் எழுதப்பெற்ற கொடி ; குறிஞ்சாக்கொடி ; பெருமருந்து . |
| கருடக்கொடியோன் | கருடக்கொடியையுடைய திருமால் . |
| கருடகம்பம் | திருமால் கோயில் கொடிமரம் ; கருடன் சன்னதியை அடுத்து இருக்கும் விளக்குத் தூண் ; கருடக்கொடித் தூண் ; வைணவ அடியவர் வலம்வருங்கால் கையில் ஏந்திச் செல்லும் எரியும் விளக்குத்தண்டு . |
| கருடகேதனன் | திருமால் , கருடக்கொடியோன் . |
| கருடசாரம் | கடலுப்பு . |
| கருடசானம் | கருடத்தியானம் . |
| கருடத்துவசன் | காண்க : கருடகேதனன் . |
| கருடத்தொனி | ஒரு பண்வகை . |
| கருடதரிசனம் | கருடனைக் கண்டு வணங்குகை . |
| கருடதிசை | கிழக்கு . |
| கருடப்பச்சை | ஒருவகை மரகதம் , கருடக்கல் . |
| கருடப்பார்வை | கூரிய பார்வை ; மாறுகண் ; நஞ்சு தீர்க்கும் பார்வை . |
| கருடபக்கம் | ஒருவகை நிருத்தக்கை . |
| கருடபஞ்சமி | ஆவணி மாதத்துச் சுக்கிலபட்சப் பஞ்சமியில் சுமங்கலிகளால் கொண்டாடப்படும் நோன்பு . |
| கருடபஞ்சாக்கரம் | ஐந்தெழுத்தாலாகிய கருடமந்திரம் . |
| கருடமுகம் | முகம் மட்டும் வெள்ளை நிறமாயிருக்கும் மாட்டுக்குற்றம் . |
| கருடர் | பதினெண் கணத்தாருள் ஒரு வகுப்பார் . |
| கருடவாகனன் | கருடனை ஊர்தியாகவுடைய திருமால் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 273 | 274 | 275 | 276 | 277 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருடக்கை முதல் - கருத்தெடுத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், திருமால், கடவுள், கருடன், கூடிய, பார்வை, கருத்து, அருள், ஒருவகை, காண்க, மனம், தாற்பரியம், அபிப்பிராயத்தோடு, கருடகேதனன், தூண், கருடக்கொடியோன், உடையதாகிய, கணக்குவேலை, பெருமருந்து, கிழங்கு, கருணை, அனுமானப், செய்வோன், பிரமாணம், தலைவன்

