முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கர்லாக்கட்டை முதல் - கரணம்போடுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கர்லாக்கட்டை முதல் - கரணம்போடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கரடி | ஒரு விலங்கு ; கரடிப்பறை ; கரடிக்கூடம் ; புரட்டு ; முத்து ; சிலம்பம் . |
| கரடிக்கூடம் | அரங்கம் , மல் சிலம்பம் முதலியன பயிலுஞ் சாலை . |
| கரடிகை | கரடி கத்துவதுபோல் ஓசையுண்டாக்கும் பறை . |
| கரடிப்பறை | கரடி கத்துவதுபோல் ஓசையுண்டாக்கும் பறை . |
| கரடிவிடுதல் | பொய்யைக் காட்டிக் கூறுதல் , தொடர்பில்லா ஒன்றைத் கூறிக் கலங்கச் செய்தல் . |
| கரடிவித்தை | சிலம்பவித்தை . |
| கரடு | முருடு ; முருட்டுக் குணம் ; சிறுகுன்று ; காற்பரடு ; மரக்கணு ; புற்கரடு ; வளர்ச்சியற்றது ; ஒருவகை முத்து ; யானையின் மதவெறி . |
| கரடுமுரடு | செம்மையற்றது , ஒழுங்கின்மை . |
| கரண் | காய்கறிகளின் முண்டு ; புண்வடு ; புல்லுடன் கூடிய மண்ணாங்கட்டி . |
| கரண்டகம் | சுண்ணாம்புச் செப்பு ; தென்னை ஓலையால் முடைந்த பூக்கூடை . |
| கரண்டம் | நீர்க்காக்கை ; அணிகலச்செப்பு ; கமண்டலம் ; கரண்டகம் . |
| கரண்டி | உலோகத்தாலாகியதும் காம்புள்ளதுமாகிய முகத்தற் கருவி ; சிறு அகப்பை . |
| கரண்டிகை | பூக்கூடை ; முடியின் ஓர் உறுப்பு . |
| கரண்டிகைச்செப்பு | கரண்டகம் , சுண்ணாம்புச் செப்பு . |
| கரண்டுதல் | சுரண்டுதல் . |
| கரண்டை | கற்பாழி , முனிவர் வாழிடம் ; பறவையின் கதிவிசேடம் ; கமண்டலம் . |
| கரண்டைக்காய்மோதிரம் | பரவ மகளிர் ஒரு விரலுக்கு நாலைந்து வீதம் ஐந்து விரலிலும் அணியும் மோதிரம் . |
| கரண்டைக்கை | முன் கை . |
| கரணகளேபரம் | பொறிகளும் உடலும் . |
| கரணத்தான் | கணக்கன் . |
| கரணத்தியலவர் | அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் ஒருவராகிய கணக்கர் . |
| கரணம் | கைத்தொழில் ; இந்திரியம் ; அந்தக்கரணம் ; மனம் ; உடம்பு ; மணச்சடங்கு ; கல்வி ; கூத்தின் விகற்பம் ; தலைகீழாகப் பாய்கை ; கருவி ; துணைக்கருவி ; காரணம் ; எண் ; பஞ்சாங்க உறுப்புகளுள் ஒன்று ; சாசனம் ; கணக்கன் ; கருமாதிச் சடங்குக்குரிய பண்டங்கள் . |
| கரணம்பாய்தல் | கூத்தாடுதல் ; கரணம் போடுதல் . |
| கரணம்போடுதல் | தலைகீழாகப் பாய்தல் ; கெஞ்சுதல் ; தன்னால் இயன்றதெல்லாம் செய்தல் . |
| கர்லாக்கட்டை | உடற்பயிற்சிக்காகக் சுழற்றுந் திரண்டு கனத்த மரக்கட்டை . |
| கர்வடம் | மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர் ; நானூறு ஊருக்குத் தலையூர் . |
| கர்வம் | செருக்கு ; இலட்சங்கோடி ; குபேரனுடைய நிதியுள் ஒன்று . |
| கர்வி | செருக்குள்ளவன் . |
| கர்வித்தல் | செருக்குதல் . |
| கர்விதன் | காண்க : கர்வி . |
| கர | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தைந்தாம் ஆண்டு . |
| கரகம் | கமண்டலம் ; ஆலங்கட்டி ; நீர்த்துளி ; நீர் ; கங்கை ; தாதுமாதுளை ; வேண்டுதலுக்காக எடுக்கும் பூங்குடம் . |
| கரகமாடுதல் | வேண்டுதலுக்காகப் பூங்குடமெடுத்து ஆடுதல் . |
| கரகமூக்கு | நீர் விழும் கெண்டியின் உறுப்பு . |
| கரகரணம் | கையினாற் செய்யும் அபிநயம் . |
| கரகரத்தல் | உறுத்துதல் ; சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல் ; கடித்தற்குக் கரகரப்பாதல் ; விடாமல் வேண்டுதல் ; அலைக்கழித்தல் . |
| கரகரப்பிரியா | ஒரு பண்வகை . |
| கரகரப்பு | தொண்டையரிப்பு ; குரல் கனத்திருக்கை ; ஓயாது வேண்டுகை ; அலைக்கழிப்பு . |
| கரகரெனல் | தொண்டையரித்தற் குறிப்பு ; வருத்துதற் குறிப்பு ; கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு ; பலாத்காரமாய் இழுத்த ஒலிக்குறிப்பு . |
| கரசம் | புலித்தொடக்கி ; கூரிய நுனியுடைய ஓர் ஆயுதம் ; யானை . |
| கரசரணாதி | கைகால் முதலியன . |
| கரசை | கரணம் பதினொன்றனுள் ஒன்று ; கரிசை , 400 மரக்கால் கொண்ட ஓரளவு . |
| கரஞ்சம் | புன்கமரம் . |
| கரட்டரிதாரம் | அரிதாரவகை , ஒரு மருந்து . |
| கரட்டான் | ஓணான்வகை . |
| கரட்டுக்கரட்டெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கரட்டுக்கல் | செப்பனிடப்பெறாத முருட்டுக்கல் . |
| கரட்டுத்தரை | மேடுபள்ளமான நிலம் ; கரிசற் பூமி . |
| கரட்டுவாதம் | கழலை ; விதண்டாவாதம் . |
| கரட்டுவிரியன் | செந்நிறமுள்ள விரியன்பாம்பு வகை . |
| கரட்டோணான் | கரட்டு நிலத்தே வாழும் ஓணான் . |
| கரட்டோந்தி | கரட்டு நிலத்தே வாழும் ஓணான் . |
| கரடகம் | கபடம் , வஞ்சனை . |
| கரடகம்பம் | கபடம் , வஞ்சனை . |
| கரடகன் | விரகன் , தந்திரி . |
| கரடம் | காக்கை ; யானையின் மதம் ; யானைக் கவுளினின்றும் மதம்பாயுந் தொளை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 268 | 269 | 270 | 271 | 272 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்லாக்கட்டை முதல் - கரணம்போடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, கமண்டலம், கரடி, கரணம், கரண்டகம், குறிப்பு, தலைகீழாகப், ஓணான், கபடம், வஞ்சனை, வாழும், கர்வி, ஒலிக்குறிப்பு, கணக்கன், நீர், நிலத்தே, கரட்டு, கருவி, சிலம்பம், முதலியன, முத்து, கரடிக்கூடம், கரடிப்பறை, கத்துவதுபோல், ஓசையுண்டாக்கும், செப்பு, பூக்கூடை, சுண்ணாம்புச், யானையின், செய்தல், உறுப்பு

