தமிழ் - தமிழ் அகரமுதலி - கடிதல் முதல் - கடுங்காய் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கடிவாளம் | குதிரையின் வாய்வடம் , குதிரையின் வாயில் மாட்டும் இரும்புக் கருவி . |
| கடிவை | யானை |
| கடினம் | வன்மை , மென்மையின்மை ; கொடுமை ; அருமை . |
| கடினை | உரப்பாய் விழியகத்தேயுள்ள வெளிச்சவ்வு . |
| கடு | கடுக்காய்மரம் ; கசப்பு ; நஞ்சு ; முள் ; கார்ப்பு ; துவர்ப்பு ; முதலை ; பாம்பு . |
| கடுக்கம் | விரைவு . |
| கடுக்கன் | ஆடவர் காதணி ; ஒட்டுப்புல் . |
| கடுக்காய் | கடுமரத்தின் காய் , திரிபலையுள் ஒன்று ; ஒரு மருந்துச் சரக்கு . |
| கடுக்காய் கொடுத்தல் | ஏமாற்றுதல் . |
| கடுக்கிரந்தி | இஞ்சி . |
| கடுக்குதல் | முலாம் பூசுதல் ; சினக்குறி காட்டுதல் ; சுளித்தல் ; மேலே ஒதுக்குதல் . |
| கடுக்கும் | ஒக்கும் , ஓர் உவமவுருபு . |
| கடுக்கெனல் | கடுமைக் குறிப்பு . |
| கடுக்கை | கொன்றைமரம் ; சரக்கொன்றை ; மருதமரம் . |
| கடுக | கடிதில் ; விரைய ; விரைவில் . |
| கடுகடுத்தல் | உறைத்தல் ; சினக்குறிப்புக் காட்டுதல் ; வெடுவெடுத்தல் ; விறுவிறுப்போடு வலித்தல் . |
| கடுகடுப்பு | வெறுப்பு ; சினக்குறிப்பு ; மிக்க உறைப்பு ; குத்துவலி . |
| கடுகம் | கார்ப்பு ; கடுகுரோகிணி ; சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் திரிகடுங்களுள் ஒன்று ; திரிகடுகம் என்னும் நூல் ; மோதிரம் ; குடம் . |
| கடுகலாத்தி | கண்ணூறு நீங்கக் கடுகினாற் சுற்றும் ஆலத்தி . |
| கடுகி | சுண்டைச்செடி . |
| கடுகு | கடுகுபூண்டு ; குன்றிக்கொடி ; எண்ணெய்க் கசடு . |
| கடுகுடுத்தல் | தெளிவின்றிப் பேசுதல் ; சினமாய்ப் பேசுதல் . |
| கடுகுடுத்தான் | துடிப்புள்ளவன் . |
| கடுகுதல் | விரைதல் ; மிகுதல் ; அணுகுதல் ; குறைதல் . |
| கடுகுதிரளுதல் | காய்ச்சும்போது எண்ணெய்க் கடுகு கூடுதல் . |
| கடுகுபதம் | மருந்தெண்ணெய்ப் பதங்களுள் ஒன்று . |
| கடுகுமணி | வெண்கடுகு ; கழுத்தில் அணியும் சிறுமணி . |
| கடுகுரோகிணி | ஒரு மருந்துச் சரக்கு . |
| கடுகெண்ணெய் | கடுகு நெய் , கடுகின் தைலம் . |
| கடுகென | விரைவாக . |
| கடுகோரை | கடுகும் நெய்யும் கலந்து சமைத்த சித்திரான்னம் . |
| கடுங்கண் | தறுகண்மை , அஞ்சாமை . |
| கடுங்கணாளன் | வன்கணாளன் , கொடியோன் . |
| கடுங்கதிர் | சூரியன் . |
| கடுங்கருத்து | கூரிய கருத்து ; நேரே பொருளைத் தாராத கருத்து . |
| கடுங்கவி | ஆசுகவி வல்லான் . |
| கடுங்காந்தி | வைப்புப் பாடாணத்துள் ஒன்று . |
| கடுங்காய் | சாதிக்காய் ; பழுக்கும் பருவம் சிறிதும் பெறாத காய் . |
| கடிதல் | ஓட்டுதல் , நீக்குதல் ; அழித்தல் ; கண்டித்தல் ; கோபித்தல் ; விரைதல் ; கொல்லுதல் ; வெட்டுதல் ; அடக்குதல் . |
| கடிது | கடுமையானது ; விரைவாய் ; மிக . |
| கடிந்தமன் | குயவன் . |
| கடிந்தோன் | முனிவன் . |
| கடிநகர் | காவல் உள்ள நகரம் ; மணமனை . |
| கடிப்பகை | வேம்பு ; கடுகு ; வெண்கடுகு ; வெண்சிறுகடுகு . |
| கடிப்பம் | காதணி ; அணிகலச் செப்பு ; கெண்டி . |
| கடிப்பா | ஊறுகாய் ; கறி . |
| கடிப்பான் | ஊறுகாய் ; கறி . |
| கடிப்பிணை | காதணிவகை . |
| கடிப்பிரதேசம் | இடுப்பு . |
| கடிப்பு | குறுந்தடி ; துருத்தியின் கைப்பிடி ; காதணி ; ஆமை ; குமிழ் ; கடிபட்ட தழும்பு . |
| கடிப்பேறு | முரசினை அடிகோலால் அடிக்கை . |
| கடிப்பை | வெண்சிறுகடுகு . |
| கடிபடி | சண்டை ; கடுமையான ஆணை . |
| கடிமரம் | காவல்மரம் ; பகைவர் அணுகா வண்ணம் வளர்த்துக்காக்கப்படும் காவல்மரம் . |
| கடிமனை | திருமண வீடு ; காவலிடம் . |
| கடிமாடம் | காவலமைந்த கன்னிமாடம் . |
| கடிமுரசம் | அரசாங்கத்திற்குரிய முரசம் . |
| கடிமூலம் | முள்ளங்கிச் செடி . |
| கடியடு | சிற்றரத்தை . |
| கடியல் | தோணியின் குறுக்குமரம் ; மரக்கலங்களின் குறுக்குமரம் . |
| கடியறை | மணவறை . |
| கடியன் | கடுமையுள்ளவன் , கடின சித்த முடையவன் . |
| கடியாரம் | காண்க : கடிகாரம் . |
| கடியிரத்தம் | மூக்கிரட்டைப் பூண்டு . |
| கடியிருக்கை | திருமண மண்டபம் . |
| கடிரோமம் | கோரைக்கிழங்கு . |
| கடிலா | காண்க : கடியிரத்தம் . |
| கடிவட்டு | வட்டுடை . |
| கடிவாய் | பல் பட்ட இடம் , கடித்த இடம் . |
| கடிவாள் | குதிரையின் வாய்வடம் , குதிரையின் வாயில் மாட்டும் இரும்புக் கருவி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 246 | 247 | 248 | 249 | 250 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடிதல் முதல் - கடுங்காய் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குதிரையின், ஒன்று, கடுகு, காதணி, கருத்து, விரைதல், பேசுதல், வெண்சிறுகடுகு, வெண்கடுகு, ஊறுகாய், கடியிரத்தம், இடம், காண்க, குறுக்குமரம், காவல்மரம், திருமண, எண்ணெய்க், கடுகுரோகிணி, இரும்புக், கருவி, மாட்டும், வாயில், வாய்வடம், கார்ப்பு, கடுக்காய், காட்டுதல், சரக்கு, மருந்துச், காய், என்னும்

