முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கட்டியங்கூறுதல் முதல் - கட்டுப்படுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கட்டியங்கூறுதல் முதல் - கட்டுப்படுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கட்டுங்காவலுமாதல் | பெருங்காவலுடையதாதல் . |
| கட்டுச்சரக்கு | மொத்தமாக விற்கப்படும் பண்டம் ; நாட்பட்ட பொருள் . |
| கட்டுச்சாட்சி | பொய்ச்சாட்சி . |
| கட்டுச்சொல் | பொய்யுரை . |
| கட்டுச்சொல்லுதல் | குறிசொல்லுதல் . |
| கட்டுச்சோறு | வழிப்பயணத்துக்குக் கொண்டு செல்லும் சோறு . |
| கட்டுசூலை | சூலைக்கட்டு ; குதிரை நோய் வகை . |
| கட்டுடைத்தல் | தபால் கட்டிய பையை உடைத்தல் ; கருத்தை வெளிப்படுத்துதல் ; கரைகடத்தல் ; அணையுடைத்தல் ; புண்ணுடைதல் . |
| கட்டுடைதல் | உடல் தளர்வுறுதல் ; பூமுறுக்கு அவிழ்தல் . |
| கட்டுண்கை | கட்டுப்படுதல் . |
| கட்டுண்ணல் | கட்டுப்படுதல் . |
| கட்டுண்ணி | கட்டுப்பட்டுப் பேசுபவன் . |
| கட்டுத்தறி | விலங்குகளைக் கட்டும் தூண் ; யானை மாடு முதலியன கட்டும் தூண் . |
| கட்டுத்திரவியம் | பொற்கிழி . |
| கட்டுத்தோணி | கடற்கரையருகில் ஆழமில்லா நீரில் செல்லவிடும் ஒருவகைப் படகு . |
| கட்டுதல் | பிணித்தல் ; அமைத்தல் ; செலுத்துதல் ; கற்பித்துச் சொல்லுதல் ; சேர்த்தல் ; தடுத்தல் : இயற்றுதல் : போலுதல் ; இறுகுதல் ; வெல்லுதல் ; நிமித்தமாதல் ; அடக்குதல் : எழுப்புதல் ; தழுவுதல் ; திருமணம் பண்ணுதல் ; பிடுங்குதல் ; கதை கட்டல் ; வீடு முதலியன கட்டல் ; உரை கட்டுதல் ; களவு செய்தல் ; உகுத்தல் ; சூடுதல் ; வசப்படுத்தல் ; முடித்தல் . |
| கட்டுதிட்டம் | சட்டதிட்டம் ; ஒழுங்கு , வரையறை . |
| கட்டுப்படகு | கட்டுத்தோணி . |
| கட்டுப்படி | இழப்பு இல்லாமல் சிறிது இலாபகரமாக அமைதல் . |
| கட்டுப்படுத்தல் | அடக்கிக்கொள்ளுதல் ; எல்லைப்படுத்துதல் ; கட்டுவித்தியினிடம் குறி கேட்டல் . |
| கட்டுப்படுதல் | கட்டுக்குள் அடங்குதல் ; மந்திர முதலியவற்றாற் கட்டுப்படல் ; அடங்கியிருத்தல் ; தடைபடுதல் . |
| கட்டியங்கூறுதல் | புகழ்சொல்லுதல் . |
| கட்டியம் | புகழ்மொழி ; அரசர் முதலியோரைக் குறித்துச் சொல்லும் புகழ்த் தொடர் ; ஒருவகைக் கூத்து . |
| கட்டியன் | காண்க : கட்டியக்காரன் . |
| கட்டில் | மஞ்சம் ; அரசுகட்டில் , அரியணை ; பாடை . |
| கட்டிலேற்றுதல் | புது மணமக்களை மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ள வைத்தல் . |
| கட்டிலேறுதல் | அரியணையேறுதல் ; மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ளுதல் . |
| கட்டிவராகன் | பொன்நாணயம் . |
| கட்டிவருதல் | ஊதியங் கூடிவருதல் . |
| கட்டிவிடுதல் | செலுத்துதல் ; விலக்கிவைத்தல் ; பொய்ச் செய்தியைப் பரப்புதல் . |
| கட்டிளமை | மிக்க இளமை ; காளைப் பருவம் . |
| கட்டு | உறுதி ; காவல் ; அரண் ; ஆணை ; உறவின் கட்டு ; தடைக்கட்டு ; யாக்கை ; மூட்டை ; குறி ; வரம்பு , கட்டுப்பாடு ; மிகுதி ; மலைப்பக்கம் ; பொய்யுரை ; வளைப்பு ; திருமணப்பற்று ; வீட்டின் பகுதி . |
| கட்டு | (வி) பந்தி , தளை , பிணி ; வீடு முதலியன கட்டு ; தழுவு ; மணஞ்செய் ; தடைகட்டு ; கதைகட்டு ; சரக்குக்கட்டு ; அடக்கு ; இறுகு ; மூடு . |
| கட்டுக்கட்டுதல் | மூட்டை முதலியன கட்டுதல் ; பொய்யாகப் புனைந்துரைத்தல் ; புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுதல் . |
| கட்டுக்கடத்தல் | வரம்பு கடத்தல் . |
| கட்டுக்கடுக்கன் | மணி பதித்த கடுக்கன் . |
| கட்டுக்கதை | பொய்க் கதை , கற்பனைக் கதை . |
| கட்டுக்கரப்பான் | சிறு பிள்ளைக்கு வரும் ஒரு வகைக் கரப்பான் நோய் . |
| கட்டுக்கரை | சரக்கு இறக்கும் துறை . |
| கட்டுக்கழுத்தி | சுமங்கலி , மங்கலியம் அணிந்தவள் ; மனைவி . |
| கட்டுக்காடை | நீர்ப்பறவைவகை ; பாற்குருவி . |
| கட்டுக்காரன் | குறிசொல்வோன் ; கட்டியங் கூறுவோன் . |
| கட்டுக்காவல் | கட்டான காவல் , கடுங்காவல் . |
| கட்டுக்கிடை | நாட்பட்டசரக்கு ; தேக்கம் ; நெடுநாளாய்க் கிடக்கிற பொருள் ; ஓடாமல் தேங்கிய நீர் . |
| கட்டுக்கிடையன் | நாட்பட்டசரக்கு ; தேக்கம் ; நெடுநாளாய்க் கிடக்கிற பொருள் ; ஓடாமல் தேங்கிய நீர் . |
| கட்டுக்குத்தகை | உத்தேசமாய் ஒரு தொகைக்குக் கொடுக்குங் குத்தகை ; காலம் நீட்டித்து விடும் மொத்தக் குத்தகை ; விளைவுக்காகக் கொடுக்கும் மொத்தத் தொகை ; தோணிக் குத்தகை . |
| கட்டுக்கூட்டு | கட்டுக்கதை ; எழுத்து மாறியெழுதல் . |
| கட்டுக்கொடி | ஆடுமாடுகளைக் கட்டும் கயிறு ; ஒரு பூண்டு . |
| கட்டுக்கோப்பு | அமைப்பு ; கட்டடம் ; புனைந்துரை ; மேற்கூரை ; காவல் உள்ள பகுதி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 240 | 241 | 242 | 243 | 244 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கட்டியங்கூறுதல் முதல் - கட்டுப்படுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கட்டு, முதலியன, கட்டுதல், பொருள், கட்டுப்படுதல், குத்தகை, காவல், கட்டும், கட்டுக்கதை, பகுதி, நாட்பட்டசரக்கு, நெடுநாளாய்க், நீர், தேங்கிய, ஓடாமல், வரம்பு, கிடக்கிற, தேக்கம், கட்டிலில், கட்டுத்தோணி, தூண், நோய், பொய்யுரை, செலுத்துதல், கட்டல், மணவறைக், குறி, வீடு, மூட்டை

