தமிழ் - தமிழ் அகரமுதலி - கச்சபீ முதல் - கசடு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கச்சைக்கொடியோன் | யானைக் கழுத்திடு கயிற்றைக் கொடியிற் கொண்டவன் , கன்னன் . |
| கச்சோடி | வெள்ளை ; வெற்றிலை . |
| கச்சோணி | தாம்பூலத்தோடு சேரும் மணப்பண்டம் . |
| கச்சோதம் | மின்மினி . |
| கச்சோரம் | கிச்சிலிக் கிழங்கு ; பூலாங்கிழங்கு . |
| கச்சோலம் | காண்க : கச்சோரம் ; ஏலக்காய்த் தோல் ; ஒருவகை மணப்பொருள் ; சிறுபாண்டம் . |
| கசக்கல் | கசக்குதல் ; கசங்கச் செய்தல் . |
| கசக்கார் | இனிமையான மாங்காய் . |
| கசக்கால் | ஊற்றுக்கால் . |
| கசக்குதல் | கசங்கச் செய்தல் ; துணியைக் கும்முதல் ; வருத்துதல் ; குழையச் செய்தல் ; நெருக்குதல் ; கைப்புச்சுவையாதல் . |
| கசகசத்தல் | இறுக்கத்தால் உடம்பு வியர்த்தல் ; ஒலித்தல் . |
| கசகசவெனல் | ஒலிக்குறிப்பு ; இறுக்கக் குறிப்பு ; செழிப்புக் குறிப்பு . |
| கசகசா | அபினிச் செடி ; கசகசா விதை . |
| கசகம் | வெள்ளரிக்கொடி . |
| கசகர்ணம் | யானைபோல் காதாட்டும் வித்தை ; பெரு முயற்சியால் ஆகவேண்டிய செயல் . |
| கசகர்ணம்போடுதல் | பெருமுயற்சி செய்தல் . |
| கசகர்ணி | வெருகஞ்செடி ; மெருகன் கிழங்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் . |
| கசகரிகம் | கக்கரி , முள்வெள்ளரி . |
| கசகன்னம் | காண்க : கசகர்ணம் . |
| கசகன்னி | வெருகஞ்செடி . |
| கசகுதல் | பின்வாங்குதல் ; ஐயத்தால் தளர்தல் ; நெருக்குதல் . |
| கசங்கு | ஈந்து ; ஓலை நீக்கிய ஈந்தின் கசங்கிய மட்டை . |
| கசங்குதல் | நிலைகெடுதல் ; தளர்தல் , இளைத்தல் ; குழைதல் ; மனம் நோகுதல் ; வேலையினால் இளைத்தல் . |
| கசட்டம்புல் | சுக்குநாறிப்புல் . |
| கசட்டை | துவர்ப்பு . |
| கசட்டைத்தயிர் | ஆடைநீக்கின தயிர் . |
| கசடன் | கீழ்மகன் ; குற்றம் செய்தவன் . |
| கசடு | குற்றம் ; அழுக்கு ; மாசு ; தழும்பு ; ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள் ; வடு ; அடிமண்டி ; குறைவு . |
| கச்சபீ | கலைமகளின் வீணை . |
| கச்சம் | அளவு ; ஓர் எண்ணுப்பெயர் ; இலட்சம் ; மரக்கால் ; ஒப்பந்தம் ; துணிவு ; இறகு ; கடுகு ரோகிணி ; ஒரு மீன் ; வார்க்கச்சு ; முன்றானை ; ஆடைச்சொருக்கு , யானைக் கழுத்திடு கயிறு ; ஆமை ; குதிரை அங்கவடி ; பக்கம் ; காய்ச்சற்பாடாணம் . |
| கச்சல் | மிகவும் இளம்பிஞ்சு ; ஒல்லி ; கசப்பு ; வெறுப்பு ; பிஞ்சு வாழைக்காய் . |
| கச்சலாட்டம் | சச்சரவு . |
| கச்சவடக்காரன் | வணிகன் . |
| கச்சவடம் | வணிகம்: குழப்புகை . |
| கச்சளம் | இருள் ; கண்ணிலிடு மை ; கரிப்புகை . |
| கச்சற்கருவாடு | கருவாட்டுவகை ; மீன்பொடி . |
| கச்சற்கோரை | நெய்தல் நிலத்துப் புல்வகை . |
| கச்சன் | ஆமை . |
| கச்சா | தாழ்மை ; ஒரு நிறை . |
| கச்சாச்சேர் | எட்டுப்பலம் கொண்ட நிறை . |
| கச்சாத்து | நிலவரி முதலிய கணக்கு ; நிலவரி செலுத்தியதற்குரிய பற்றுச்சீட்டு . |
| கச்சாயம் | ஒருவகைச் சிற்றுண்டி ; கடலருகான முனை . |
| கச்சாரம் | பாய்முடையும் தொழில் . |
| கச்சால் | மீன்பிடிக்குங் கூடு . |
| கச்சாலம் | காய்ச்சற் பாடாணம் . |
| கச்சாலை | கச்சாலயம் ; காஞ்சிபுரத்திலுள்ள சிவாலயங்களுள் ஒன்று . |
| கச்சான் | மேல்காற்று ; மேற்குத்திசை . |
| கச்சான்கோடை | தென்மேல் காற்று . |
| கச்சி | காஞ்சிபுரம் ; சீந்திற்கொடி ; கொட்டாங்கச்சி , சிரட்டை ; சின்னிப்பூடு . |
| கச்சிதம் | ஒழுங்கு ; தக்கபடி அமைகை . |
| கச்சிப்பேடு | கச்சி என்னும் காஞ்சிபுரம் . |
| கச்சு | அரைப்பட்டிகை ; கச்சைப்பட்டை ; முலைக்கக்சு ; கச்சை ; மேலாடை ; நெருப்பு ; மீன் . |
| கச்சுக்கச்செனல் | ஓயாது பிதற்றுதல் . |
| கச்சுகோரம் | பாண்டவகை . |
| கச்சுதல் | கடித்தல் . |
| கச்சுப்பிச்செனல் | தாறுமாறாகப் பேசுதல் . |
| கச்சுரி | நெருப்பு . |
| கச்சுரை | காண்க : கச்சூர்க்காய் ; பெருங்காஞ்சொறி . |
| கச்சூர்க்காய் | பேரீச்சம்பழம் ; தின்பண்டவகை . |
| கச்சூரம் | கழற்சிக்கொடி ; கழற்காய் ; பேரீந்து . |
| கச்சேரி | உத்தியோக சாலை , அலுவற்கூடம் ; ஆடல் பாடல் நிகழ்ச்சி ; ஆடல் பாடல் முதலியவற்றிற்காகக் கூடும் கூட்டம் . |
| கச்சை | கயிறு ; கவசம் ; தழும்பு ; அரைக்கச்சு ; அரைப்பட்டிகை ; யானைக் கழுத்திடு கயிறு , யானைக் கீழ்வயிற்றுக் கயிறு ; முழுப்புடைவை ; வார் ; கோவணம் ; கிண்கிணி . |
| கச்சைக்கட்டுதல் | அரையில் கட்டுதல் ; தாறு பாய்ச்சிக் கட்டுதல் ; ஆடையை இறுகக் கட்டுதல் ; ஒன்றைச் செய்ய முற்படுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 236 | 237 | 238 | 239 | 240 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கச்சபீ முதல் - கசடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யானைக், செய்தல், கயிறு, காண்க, கழுத்திடு, கட்டுதல், கச்சி, நிலவரி, நிறை, காஞ்சிபுரம், நெருப்பு, ஆடல், பாடல், கச்சூர்க்காய், மீன், கச்சை, அரைப்பட்டிகை, இளைத்தல், கசங்கச், நெருக்குதல், கசக்குதல், கிழங்கு, கச்சோரம், குறிப்பு, கசகசா, குற்றம், தளர்தல், வெருகஞ்செடி, கசகர்ணம், தழும்பு

