முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஓலுறுத்தல் முதல் - ஔத்தாலிகம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஓலுறுத்தல் முதல் - ஔத்தாலிகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஓலைக்கிளிஞ்சல் | சங்குவகை ; கிளிஞ்சல்வகை ; |
| ஓலைக்குடை | ஓலையால் மழை வெயில் தாங்க முடையப்படும் கூடு . |
| ஓலைக்கூடை | ஓலையால் மழை வெயில் தாங்க முடையப்படும் கூடு . |
| ஓலைக்கோள் | கடிதப் போக்குவரத்து . |
| ஓலைச்சுருள் | ஓலைக் கடிதம் . |
| ஓலைச்சுவடி | ஓலையால் அமைந்த நூல் ; ஒரு மீன்வகை . |
| ஓலைத்தூக்கு | சீட்டுக்கவி . |
| ஓலைதீட்டுதல் | ஓலையில் எழுதுதல் . |
| ஓலைதீட்டும்படை | எழுத்தாணி . |
| ஓலைநாயகம் | சோழருடைய தலைமைக்காரிய நிருவாகி . |
| ஓலைநாயகன் | சோழருடைய தலைமைக்காரிய நிருவாகி . |
| ஓலைப்பாசுரம் | கடிதச் செய்தி ; சீட்டுக்கவி . |
| ஓலைப்பாயிரம் | கடிதச் செய்தி ; சீட்டுக்கவி . |
| ஓலைப்புறம் | கட்டளை . |
| ஓலைப்பூ | தாழம்பூ . |
| ஓலைபோக்குதல் | ஓலையில் செய்தி எழுதி அனுப்புதல் . |
| ஓலைமுகப்பாசுரம் | கடிதத் தொடக்கத்தில் எழுதும் வக்கணை . |
| ஓலைமுத்திரை | ஓலை முகப்பில் இடும் முத்திரை . |
| ஓலைமுறி | ஓலைச்சீட்டு . |
| ஓலையெழுத்து | இராயசம் . |
| ஓலையெழுதுதல் | சீட்டெழுதுதல் ; சீதனவுறுதியெழுதுதல் ; கடிதம் அனுப்புதல் . |
| ஓலைவாங்குதல் | சாதல் ; இறத்தல் . |
| ஓலைவார்தல் | எழுதுதற்கு உதவுமாறு ஓலை சீவுதல் . |
| ஓலைவாலன் | வாளைமீன்வகை . |
| ஓலைவாளை | வாளைமீன்வகை . |
| ஓவம் | ஓவியம் ; சித்திரம் ; உயரம் ; |
| ஓவர் | கம்மாளர் ; ஓவியர் ; சித்திரகாரர் ; ஏத்தாளர் . |
| ஓவருதல் | ஒழிதல் . |
| ஓவன் | ஓவியன் ; சித்திரகாரன் . |
| ஓவாமை | நீங்காமை ; ஒழியாமை ; இடைவிடாமை . |
| ஓவாய் | பற்கள்போன வாய் ; மூளியானகலத்தின் வாய் . |
| ஓவி | ஓவியம் , சித்திரம் . |
| ஓவியகாயம் | அழகிய வரிகளையுடைய புலி . |
| ஓவியப்பேச்சு | இனியமொழி . |
| ஓவியம் | சித்திரம் ; சித்திரத் தொழில் ; அழகு ; பிரதிமை . |
| ஓவியன் | சித்திரம் வரைபவன் ; சித்திரகாரன் ; சிற்பி ; பிரதிமைசெய்வோன் ; சிற்ப நூலோன் . |
| ஓவு | காண்க : ஓவி . |
| ஓவுதல் | ஒழிதல் , நீங்குதல் ; நீக்குதல் ; முடிதல் . |
| ஓவெனல் | ஓரொலிக் குறிப்பு ; ஓவென்றொலித்தல் ; ஓவென்று முறையிடல் ; முழு இருட்டாதல் குறிப்பு . |
| ஓளி | ஒழுங்கு ; யானையின் கூட்டம் . |
| ஓற்பலம் | கோங்கு ; |
| ஓனம் | எழுத்தின் சாரியை . |
| ஔ | பன்னிரண்டாம் உயிரெழுத்து ; தாரவிசையின் எழுத்து ; பூமி ; அநந்தன் என்னும் பாம்பு ; விளித்தல் ; அழைத்தல் ; வியப்பு ; தடை இவற்றைக் காட்டும் ஒரு முன்னொட்டு . |
| ஔக்குறுக்கம் | ஔகாரக் குறுக்கம் ; ஔகாரம் தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலித்தல் . |
| ஔகம் | இடைப்பாட்டு . |
| ஔகாரம் | ஔ' என்னும் எழுத்து . |
| ஔசனம் | உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று . |
| ஔசித்தியம் | தகுதி , உசிதமாந்தன்மை . |
| ஔசீரம் | இருக்கை ; ஆசனம் ; கவரிமான் மயிர் ; படுக்கை . |
| ஔடணம் | மிளகுசாறு . |
| ஔடதம் | மருந்து ; மாற்று மருந்து . |
| ஔடதவாதி | மூலிகையிலிருந்து உயிர் உற்பத்தியாயிற்று என்று கூறுவோன் . |
| ஔடவம் | ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் . |
| ஔடவராகம் | ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் . |
| ஔத்தமர்ணிகம் | வட்டியோடு தருவதாக வாங்கிய பொருள் . |
| ஔத்தாலகம் | புற்றுத்தேன் . |
| ஔத்தாலிகம் | புற்றுத்தேன் . |
| ஓலுறுத்தல் | இன்னோசையுண்டாக்குதல் ; தாலாட்டுதல் . |
| ஓலுறுதல் | ஒலி பொருந்துதல் ; கூவுதல் . |
| ஓலை | பனை , தென்னை முதலியவற்றின் ஓலை ; தாழையோலை ; எழுதுமோலை ; திருமுகம் ; ஆவண ஓலை ; சீட்டு ; ஓலைச் சுருள் ; பேய்முன்னை ; ஓலைப்படல் ; ஓலைக்குடை ; ஓலைக்குடல் ; காதணி . |
| ஓலைக்கண் | ஓலைச்சட்டம் ; ஓலைச்சட்டத்தில் விழும் துளை . |
| ஓலைக்கணக்கர் | பள்ளியிற் படிப்போர் , மாணவர்கள் . |
| ஓலைக்காந்தல் | ஓலையின் நெருப்புக் கனிவு . |
| ஓலைக்கிணாட்டு | ஓலைத்துண்டு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 233 | 234 | 235 | 236 | 237 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓலுறுத்தல் முதல் - ஔத்தாலிகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சித்திரம், செய்தி, சீட்டுக்கவி, ஓவியம், ஓலையால், வாய், குறிப்பு, ஓவியன், எழுத்து, சித்திரகாரன், ஔகாரம், பயன்படுத்தப்படும், புற்றுத்தேன், சுரமட்டும், ஐந்து, ஒழிதல், மருந்து, என்னும், வாளைமீன்வகை, கூடு, கடிதம், முடையப்படும், தாங்க, வெயில், ஓலையில், சோழருடைய, அனுப்புதல், கடிதச், நிருவாகி, தலைமைக்காரிய, ஓலைக்குடை

