தமிழ் - தமிழ் அகரமுதலி - ஓங்கிப்பார்த்தல் முதல் - ஓட வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஓட்டையுடைசல் | சிதைந்த பண்டங்கள் . |
| ஓட்டைவாயன் | உளறுவாயன் ; மறையினை வெளியிடுபவன் . |
| ஓட | உவமவுருபு . |
| ஓட்டைமனம் | ஒன்றும் தாங்காத மனம் ; இள நெஞ்சு . |
| ஓச்சன் | பிடாரிகோயில் பூசாரி ; கணக்காயன் ; ஆசான் . |
| ஓச்சன் கத்தி | பலி வெட்டும் அறுவாள் . |
| ஓச்சுதல் | எறிதல் ; பாய்ச்சுதல் ; செலுத்துதல் ; வீசுதல் ; உயர்த்துதல் ; ஓட்டுதல்: தூண்டி விடுதல் . |
| ஓச்சை | வறையல் , வறுத்த உணவு . |
| ஓசம் | ஒளி ; மிகுபுகழ் ; நிமித்தம் ; சமர்த்து ; ஆதாரம் ; வலிமை ; ஆண்குறி . |
| ஓசரம் | நிமித்தம் , பொருட்டு . |
| ஓசரி | கேடு ; வியப்புக் குறிப்பு ; துன்பக் குறிப்பு ; |
| ஓசழக்கு | அழகு ; வருத்தமின்மை ; சிரமமின்மை . |
| ஓசன் | ஆசாரியன் . |
| ஓசனித்தல் | பறவை சிறகடித்தல் ; போதற்கு முயலுதல் . |
| ஓசனை | யோசனையளவு ; நான்கு காதம் . |
| ஓசி | இரவல் ; ஆசிரியன் மனைவி . |
| ஓசிவனம் | பிழைப்பு . |
| ஓசு | புகழ் ; வலி ; சும்மா கிடைப்பது . |
| ஓசுநன் | வலியோன் ; எண்ணெய் வாணிகன் ; பரவசாதியான் ; மீகாமன் . |
| ஓசை | ஒலி ; எழுத்தோசை ; செய்யுளோசை ; வான் என்னும் பூதம் தோன்றுவதற்குக் காரணமாகிய ஏழு தன்மாத்திரை ; புகழ் ; இரைச்சல் ; மிடற்றொலி ; சொல் ; பேச்சு ; இயம் ; பாம்பு ; வாழை . |
| ஓசைசெய்தளை | காலணிவகை . |
| ஓசையுடைமை | இன்னோசையுடைமை , நூலழகு பத்தனுள் ஒனறு . |
| ஓசையுண்ணுதல் | செய்யுளோசை இசைதல் . |
| ஓசையூட்டுதல் | செய்யுள் ஓசையை இசையச் செய்தல் ; செய்யுளோசை வாய்பாட்டால் அளந்தறிதல் . |
| ஓட்டக்காரன் | அஞ்சற்காரன் . |
| ஓட்டகம் | பாடல் முழுதும் இதழ் குவிந்தும கூடியும் இயலும் எழுத்துகளேயுள்ள சித்திரகவி . |
| ஓட்டங்காட்டுதல் | ஓடுவதுபோல நடித்தல் ; முன்னோடிக் காட்டுதல் ஏமாற்றுதல் . |
| ஓட்டசாட்டம் | தடபுடல் . |
| ஓட்டடுக்கு வீடு | ஓடு வேய்ந்த மனை . |
| ஓட்டடை | அப்பவகை . |
| ஓட்டத்தி | ஓட்டுத் துத்திச்செடி . |
| ஓட்டப்பம் | காண்க : ஓட்டடை . |
| ஓட்டம் | ஓடல் ; மேலுதடு ; உதடு ; நீரோட்டம் ; ஓடுமோட்டம் ; வருவாய் ; தோல்வி ; உருக்கித் தூய்மை செய்கை ; மனம் செல்லுகை . |
| ஓட்டம்பிடித்தல் | தப்பி ஓடுதல் . |
| ஓட்டன் | நடந்து செல்லும் தூதன் ; பாட்டனுக்குப் பாட்டன் . |
| ஓட்டாங்கச்சி | சிரட்டை , தேங்காய் ஓடு ; மட்கலவோட்டின் துண்டு . |
| ஓட்டாங்கிளிஞ்சல் | ஒருவகை மீன் ; உடைந்த சிப்பி . |
| ஓட்டாண்டி | இரந்துண்பவன் ; பிச்சைக்காரன் . |
| ஓட்டாம்பாரை | காண்க : ஒட்டாம்பாரை . |
| ஓட்டி | ஓட்டுகிறவன் ; ஓட்டும்பொருள் ; பாட்டிக்குப் பாட்டி ; கொவ்வைக் கனி . |
| ஓட்டியம் | காண்க : ஓட்டகம் . |
| ஓட்டிரம் | ஒரு நாடு ; ஒரிசா என வழங்கும் உற்கல நாடு . |
| ஓட்டு | ஓடுகை ; புறங்காட்டியோடுகை ; கப்பலோட்டம் ; நூலிழையோட்டுகை . |
| ஓட்டுக்கொடுத்தல் | ஓடிவிடுதல் . |
| ஓட்டுத்துத்தி | ஒருவகைப் பூண்டு . |
| ஓட்டுதல் | செலுத்துதல் ; நீங்கச்செய்தல் ; புகுத்துதல் ; செய்துமுடித்தல் ; அழித்தல் ; காலந்தாழ்த்துதல் ; நூலால் இழையிடுதல் ; கட்டடத்தில் பூசிய சாந்தை வழுவழுப்பாகத் தேய்த்தல் ; கலத்தல் . |
| ஓட்டுமுத்து | சிப்பியில் ஒட்டிய முத்து . |
| ஓட்டெடுத்தல் | விரைந்தோடுதல் . |
| ஓட்டெழுத்து | தலையெழுத்து . |
| ஓட்டை | சில்லி ; சிதைவு ; துளை ; ஓடுப்பொருளை உணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமையுருபு ; உடனொத்த . |
| ஓட்டைக்கை | பொருள் தங்காத கை . |
| ஓட்டைச்செவி | கேள்வி பற்றாத செவி . |
| ஓட்டைநெஞ்சு | அறைபோன மனம் , வெறுமை மனம் . |
| ஓட்டைப்பல் | சிதைவுற்ற பல் , மூளிப் பல் . |
| ஓங்கிப்பார்த்தல் | உன்னிப் பார்த்தல் . |
| ஓங்கிப் பிடித்தல் | எழும்பிப் பிடித்தல் . |
| ஓங்கியடித்தல் | உயர்த்தித் தாக்குதல் ; பிறன் சொல்வது ஓங்காமல் மறுத்துக் கூறல் . |
| ஓங்கில் | ஒரு கடல்மீன்வகை . |
| ஓங்குதல் | உயர்தல் ; வளர்தல் ; பரவுதல் ; பெருமையடைதல் ; பெருகுதல் ; மேலே பறிதல் ; ஓக்காளித்தல் . |
| ஓங்குவித்தல் | ஓங்கச்செய்தல் , உயரச்செய்தல் . |
| ஓச்சம் | உயர்வு , புகழ் . |
| ஓச்சல் | உயர்வு ; தளர்ச்சி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 229 | 230 | 231 | 232 | 233 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓங்கிப்பார்த்தல் முதல் - ஓட வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மனம், காண்க, செய்யுளோசை, புகழ், ஓச்சன், நாடு, பிடித்தல், உயர்வு, ஓட்டடை, ஓட்டகம், நிமித்தம், குறிப்பு, சொல், செலுத்துதல், ஓட்டுதல்

