தமிழ் - தமிழ் அகரமுதலி - ஒளிசெய்தல் முதல் - ஒற்றுமை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஒற்றாடல் | ஒற்றரை ஆளுதல் ; வேவு பார்த்தல் ; வேவுகாரரைக் கொண்டு வினைசொய்தல் . |
| ஒற்றாள் | ஒற்றன் , வேவுகாரன் . |
| ஒற்றி | நிலவடைமானம் ; உரிமையடைமானம் ; ஈட்டடைமானம் ; ஒற்றியூர் . |
| ஒற்றிக்கரணம் | காண்க : ஒற்றிச்சீட்டு . |
| ஒற்றிக்கலம் | காண்க : ஒற்றிச்சீட்டு . |
| ஒற்றிக்காணி | அடைமான நிலம் . |
| ஒற்றிக்கொள்ளுதல் | உடலில் படும்படி அழுத்துதல் ; வசப்படுத்திக் கொள்ளுதல் . |
| ஒற்றிச்சீட்டு | ஒற்றிப்பத்திரம் . |
| ஒற்றிடுதல் | ஒற்றடமிடுதல் . |
| ஒற்றித்தல் | ஒற்றையாயிருத்தல் ; ஒற்றைப்படவெண்ணல் ; ஒற்றுமைப்படுதல் ; வேவு பார்த்தல் . |
| ஒற்றிநறுக்கு | பனையோலையில் எழுதிய அடைமானக் குறிப்பு . |
| ஒற்றிப்போதல் | விலகிச்செல்லுதல் . |
| ஒற்றிமீட்டல் | அடைமானம் திருப்புதல் . |
| ஒற்றியிருத்தல் | விலகியிருத்தல் . |
| ஒற்றியெடுத்தல் | ஒற்றி ஈரம் வாங்குதல் . |
| ஒற்றிவைத்தல் | அடைமானம் வைத்தல் ; தூரத்தே வைத்தல் ; தள்ளி வைத்தல் . |
| ஒற்று | மெய்யெழுத்து ; தூது ; தூதன் ; வேவு ; வேவுகாரன் ; ஒற்றடம் . |
| ஒற்றுக்கேட்டல் | பிறர் பேச்சை மறைந்துநின்று கேட்டல் . |
| ஒற்றுதல் | ஒன்றிற்படச் சேர்தல் ; அடித்தல் ; தாளம் போடுதல் ; அமுக்குதல் ; தாங்குதல் ; தீண்டுதல் ; தழுவுதல் ; துடைத்தல் ; தள்ளுதல் ; அடுத்தல் ; கட்டுதல் ; வீழ்த்துதல் ; தத்துதல் ; காற்று வீசுதல் ; ஒட்டிக்கொள்ளுதல் ; மோதுதல் ; ஒற்றடம் போடுதல் ; நினைதல் ; உய்த்துணர்தல் ; மறைதல் ; உளவறிதல் . |
| ஒற்றுப்பெயர்த்தல் | ஒருவகைச் சித்திரகவி , ஒரு மொழியும் தொடர்மொழியுமாக நின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படுவது . |
| ஒற்றுமை | ஒன்றாயிருக்கும் தன்மை , ஒன்று சேர்ந்திருக்கும் தன்மை ; ஒருநிலைப்படுதல் , மனம் ஒருநிலைப்படுகை ; ஒருமை ; வேறன்மை ; உரிமை ; கலப்பு ; செல்வம் ; தகுதி . |
| ஒளிசெய்தல் | விளங்குதல் . |
| ஒளித்தல் | மறைத்தல் ; மனத்திலடக்குதல் ; பதுங்குதல் . |
| ஒளித்துத்திரிதல் | மறைந்து திரிதல் ; மறைந்து வாழ்தல் . |
| ஒளித்துவிளையாடுதல் | கண்பொத்தி விளையாடுதல் . |
| ஒளிதல் | மறைதல் ; தவிர்தல் |
| ஒளிப்பிடம் | மறைவிடம் . |
| ஒளிப்பு | மறைவு ; பதுங்கி மறைகை , ஒளிக்கை ; மனத்துள் அடக்குகை . |
| ஒளிப்புடம் | சூரியபுடம் . |
| ஒளிமங்குதல் | ஒளிகெடுதல் , வெளிச்சம் குறைதல் . |
| ஒளிமரம் | சோதி விருட்சம் . |
| ஒளிமழுங்குதல் | வெளிச்சம் குறைதல் . |
| ஒளிமறைவு | ஒளித்துத் திரிகை ; இரகசியம் . |
| ஒளியர் | அறிவுடையவர் ; ஒளிநாட்டு வேளாளர் ; ஒளி நாட்டார் . |
| ஒளியவன் | சூரியன் . |
| ஒளியிருத்தல் | பதுங்கியிருத்தல் ; மறைவிடத்திருத்தல் . |
| ஒளியுருவிய கல் | வைடூரியம் . |
| ஒளியோன் | காண்க : ஒளியவன் . |
| ஒளிர்த்தல் | ஒளிரச் செய்தல் . |
| ஒளிர்தல் | ஒளி செய்தல் ; விளங்குதல் . |
| ஒளிர்மருப்பு | யானைக் கொம்பு . |
| ஒளிர்முகம் | வைரக்கல் ; அழகிய முகம் . |
| ஒளிர்வு | ஒளிர்தல் ; ஒளி . |
| ஒளிவட்டம் | கண்ணாடி ; சக்கரப்படை ; பிரபை ; சந்திரன் . |
| ஒளிவட்டி | பச்சைக் கருப்பூரம் . |
| ஒளிவளவாய் | மறைவாய் , கமுக்கமாய் , இரகசியமாய் . |
| ஒளிவிடுதல் | ஒளிர்தல் . |
| ஒளிவீசுதல் | ஒளிர்தல் . |
| ஒளிவு | ஒளிர்வு ; மறைவிடம் . |
| ஒளிவுமறைவின்மை | வெளிப்படை . |
| ஒளிவைத்தல் | கண்ணி வைத்தல் ; விலங்குகளை அகப்படுத்த மறைப்பு வைத்தல் ; பார்வை விலங்கு வைத்தல் . |
| ஒளிவைத்துப்பார்த்தல் | கண்ணிவைத்துக் காத்திருத்தல் ; கைவிளக்கு வைத்துக் கூர்ந்து பார்த்தல் . |
| ஒளிறு | விளக்கம் , பிரகாசம் . |
| ஒளிறுதல் | விளங்குதல் , பிரகாசித்தல் |
| ஒற்கம் | தளர்ச்சி ; வறுமை ; குறைவு ; அடக்கம் ; பொறுமை . |
| ஒற்குதல் | குறைதல் ; தளர்தல் . |
| ஒற்றடம் | சூடுபட ஒற்றுதல் . |
| ஒற்றளபெடை | தனக்குரிய மாத்திரையில் மிகுந்தொலிக்கும் மெய்யெழுத்து ; ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் , ஃ என்னும் மெல்லின இடையின ஆய்த எழுத்துகள் மாத்திரை மிகுதல் . |
| ஒற்றறுத்தல் | தாளத்தை அறுதியிடுதல் . |
| ஒற்றன் | தூதன் ; வேவுகாரன் , உளவு பார்ப்பவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 226 | 227 | 228 | 229 | 230 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளிசெய்தல் முதல் - ஒற்றுமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வைத்தல், ஒளிர்தல், குறைதல், ஒற்றடம், வேவு, விளங்குதல், ஒற்றிச்சீட்டு, வேவுகாரன், பார்த்தல், காண்க, மறைந்து, மறைவிடம், வெளிச்சம், செய்தல், ஒளிர்வு, ஒளியவன், ஒற்றுதல், அடைமானம், ஒற்றி, ஒற்றன், மெய்யெழுத்து, தூதன், மறைதல், போடுதல், தன்மை

