தமிழ் - தமிழ் அகரமுதலி - ஊடுபற்றுதல் முதல் - ஊம்புதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஊதாரிபடுதல் | கேடுறுதல் . |
| ஊதிகை | முல்லைக்கொடி . |
| ஊதிப்பார்த்தல் | மந்திரித்தல் ; புடமிட்டுச் சோதித்தல் . |
| ஊதிப்போடுதல் | எளிதில் வெல்லுதல் . |
| ஊதியம் | இலாபம் ; கல்வி ; பயன் . |
| ஊதிலி | பாம்பாட்டிகள் ஊதும் மகுடிக் குழல் ; குழந்தைகள் ஊதும் கருவி . |
| ஊது | ஊதுகுழல் ; வண்டு . |
| ஊது | (வி) வாயால் ஊது ; வீங்கு ; வீசு . |
| ஊதுகட்டி | சொக்கவெள்ளி , தூய வெள்ளி . |
| ஊதுகணை | கணைநோய்வகை , குழந்தைகள் நோய்வகை . |
| ஊதுகரப்பாண் | குழந்தைகளுக்கு வரும் ஒருவகைக் கரப்பான் நோய் . |
| ஊதுகாமாலை | காமாலை நோய்வகை . |
| ஊதுகுழல் | ஊதும் இசைக்குழல் ; நெருப்பூதுங் குழாய் . |
| ஊதுகொம்பு | ஊதிடு கொம்பு ; கொம்பு வாத்தியவகை . |
| ஊதுதல் | குழாய் முதலியவற்றை ஊதுதல் ; தீயெரிய ஊதுதல் ; புடம்போடுதல் ; விளக்கு முதலியன அணைய ஊதுதல் ; காற்று நொய்தாய் வீசுதல் ; நோவு தீர ஊதுதல் ; வண்டு முதலியன ஒலித்தல் ; துருத்தியால் காற்றை எழுப்புதல் ; பொருமுதல் ; வீங்கல் ; பொருத்தல் ; துளைத்தல் ; நுகர்தல் . |
| ஊதுமாக்கூழ் | ஓர் இனிப்புக் கூழ் . |
| ஊதுமாந்தம் | குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய் . |
| ஊதுவத்தி | மணப் பொருளாகிய குச்சி ; சாம்பிராணித் திரி . |
| ஊதுவழலை | ஒரு பாம்புவகை . |
| ஊதுவாரம் | வெள்ளி . |
| ஊதுவிரியன் | தீண்டுவதனால் உடம்பை வீங்கச் செய்யும் ஒருவகை விரியன் பாம்பு . |
| ஊதை | காற்று ; குளிர்காற்று , வாடைக்காற்று ; வாதநோய் . |
| ஊந்து | கச்சோலம் , ஒருவகை மணப்பண்டம் . |
| ஊபம் | போரின் அணி ; குறைத்தலையுடல் . |
| ஊம் | ஊமை ; மவுனம் . |
| ஊம்புதல் | சூப்புதல் , சப்புதல் . |
| ஊடுபற்றுதல் | உள்ளே பற்றியெரிதல் , விளக்கினுள் படர்ந்து எரிதல் . |
| ஊடுபோக்குதல் | ஊடுருவச் செய்தல் , இடையே போகச் செய்தல் ; நடுவறுத்தல் ; வழக்குத் தீர்த்தல் . |
| ஊடுருவுதல் | ஊடறுத்தல் ; நுழைதல் ; துளைத்தல் ; இடையிற் புகுந்து செல்லுதல் . |
| ஊடூடே | இடையிடையே ; அடிக்கடி ; இங்குமங்கும் ; அப்போதைக்கப்போது . |
| ஊடை | தார்நூல் ; ஆடையின் குறுக்கிழை ; மணமான இளம்பெண் . |
| ஊடையம் | நீரரண் . |
| ஊண் | உண்கை ; உணவு ; ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு . |
| ஊண்சாலை | அன்ன சாலை . |
| ஊண்டழல் | வயிற்றுத் தீ . |
| ஊண்பாக்கு | உணவுண்டபின் தின்னும் வெற்றிலை பாக்கு . |
| ஊணம் | ஒரு நாடு . |
| ஊணன் | மிகவுண்போன் ; ஊண நாட்டான் ; மிலேச்சன் . |
| ஊணா | சடைச்சிமரம் . |
| ஊணி | உணவு கொள்பவன் (ள்) ; நட்டுவைக்கும் சிறு கோல் ; மாடு முதலியன கட்டும் சிறு தறி . |
| ஊணிக்கம்பு | கட்டை வண்டியின் இரு பக்கத்தும் ஊன்றப்படும் கம்புகள் . |
| ஊணுதல் | ஊன்றுதல் , நடுதல் , உணவு கொடுத்துப் பேணுதல் . |
| ஊத்தங்காய் | புதைத்துப் பழுக்கவைத்த காய் . |
| ஊத்தப்பம் | அப்பவகை . |
| ஊத்தம் | வீக்கம் ; காய்களைப் பழுக்க வைக்கப் புதைத்தல் . |
| ஊத்து | ஊதுவகை ; காகளத் தொனி ; குழந்தைகள் ஊதும் விளையாட்டுப் பொருள் ; உடம்பு ஊதுதல் . |
| ஊத்தை | அழுக்கு , உடம்பில் சேரும் அழுக்கு ; பல்லில் சேரும் அழுக்கு ; நாற்றம் ; புலால் . |
| ஊத்தைக்குடியன் | ஒரு பிசாசு . |
| ஊத்தைநாறி | தீநாற்றமுடையவன் ( ள் ) ; பீநாறி மரம் . |
| ஊத்தைப்பிணம் | நாறிய பிணம் . |
| ஊதம் | யானைக் கூட்டம் ; போர் செய்ய அழைத்தல் , போருக்கு வருமாறு கேட்டல் . |
| ஊதல் | குளிர்காற்று ; வீக்கம் ; வாதரோகம் ; ஆரவாரம் ; மிகுதி ; ஊதுகருவி . |
| ஊதல்போடுகை | புகைபோட்டுப் பழுக்கச் செய்தல் ; பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேறப் புகைமூட்டுதல் . |
| ஊதல்போடுதல் | புகைபோட்டுப் பழுக்கச் செய்தல் ; பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேறப் புகைமூட்டுதல் . |
| ஊதற்காற்று | ஊதைக் காற்று , பனிக்காலத்துக் குளிர்காற்று . |
| ஊதா | செம்மை கலந்த நீலநிறம் , மங்கல் நிறம் . |
| ஊதாங்குழல் | நெருப்பூதுங் குழாய் . |
| ஊதாம்பை | காற்றூதல் , பலூன் . |
| ஊதாரி | வீண்செலவுக்காரன் , செல்வத்தை வீணாய் அழிப்போன் ; பயனிலி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 182 | 183 | 184 | 185 | 186 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஊடுபற்றுதல் முதல் - ஊம்புதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஊதுதல், ஊதும், செய்தல், காற்று, முதலியன, குளிர்காற்று, உணவு, அழுக்கு, குழாய், குழந்தைகள், பொந்தினின்றும், வெளியேறப், புகைமூட்டுதல், போன்றவை, பெருச்சாளி, சேரும், புகைபோட்டுப், பழுக்கச், வீக்கம், துளைத்தல், நோய்வகை, வெள்ளி, வண்டு, ஊதுகுழல், குழந்தைகளுக்கு, நோய், ஒருவகை, கொம்பு, நெருப்பூதுங், சிறு

