முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » உறவாக்குதல் முதல் - உறுதிமொழி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - உறவாக்குதல் முதல் - உறுதிமொழி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உறி | பண்டங்களை வைக்கத் தொங்கவிடும் கயிறு ; தூக்கு . |
| உறிக்கா | இரு பக்கமும் உறி தொங்கிய காவடி . |
| உறிச்சமணர் | சமணமுனிவருள் ஒரு சாரார் . |
| உறிஞ்சுதல் | வாய்க்குள் இழுத்தல் ; மூக்கால் உறிஞ்சுதல் ; உள்ளிழுத்தல் , உள்ளே வாங்கல் . |
| உறிதல் | உறிஞ்சுதல் , உள்ளே வாங்கல் . |
| உறியடி | கண்ணன் பிள்ளைப் பருவத்தில் உறி வெண்ணெய் எடுத்ததைக் கொண்டாடுந் திருநாள் . |
| உறு | மிகுதி ; மிக்க ; பகை ; போர் . |
| உறுக்காட்டம் | உறுக்குதல் , அதட்டுதல் ; உறுக்கிப் பேசும் முறை ; அதிகாரம் செலுத்துகை . |
| உறுக்காட்டியம் | உறுக்குதல் , அதட்டுதல் ; உறுக்கிப் பேசும் முறை ; அதிகாரம் செலுத்துகை . |
| உறுக்கு | அதட்டுகை , அதட்டு . |
| உறுக்குதல் | அதட்டுதல் ; சினத்தல் ; ஒறுத்தல் ; தாண்டுதல் . |
| உறுகண் | துன்பம் ; நோய் ; வறுமை ; அச்சம் . |
| உறுகணாளன் | வறிஞன் ; தீவினையாளன் . |
| உறுகோள் | நிகழ்ச்சி , சம்பவம் ; பற்றுக்கோடு . |
| உறுசுவை | சாராலங்காரம் , பல இன்கவிகளின் பிழிவாய் ஒரு பொருளை உயர்த்திக் கூறல் . |
| உறுத்தல் | உறுத்துதல் ; மிகுக்கை ; ஒற்றுகை . |
| உறுத்தருதல் | நெருக்குதல் . |
| உறுத்துதல் | உண்டாக்குதல் ; அமைத்தல் ; அடைவித்தல் ; ஒற்றுதல் ; பதித்தல் ; நாட்டுதல் ; அழுத்துதல் ; வருத்துதல் ; மிகுத்தல் ; விரித்தல் ; செலுத்துதல் ; பொருத்துதல் ; சேர்த்தல் ; சீறுதல் . |
| உறுத்தை | அணில் . |
| உறுதல் | உண்டாதல் ; மிகுதல் ; சேர்தல் ; இருத்தல் ; பொருந்தல் ; கூடல் ; நேர்தல் ; பயனுறல் ; கிடைத்தல் ; வருந்தல் ; தங்கல் ; அடைதல் ; நன்மையாதல் ; உறுதியாதல் ; நிகழ்தல் . |
| உறுதி | திடம் ; திரம் ; வலிமை ; நன்மை ; இலாபம் ; கல்வி ; மேன்மை ; சன்மார்க்க உபதேசம் ; உறுதி ; தளராமை ; ஆட்சிப் பத்திரம் ; பிடிவாதம் ; விடாப்பிடி ; பற்றுக்கோடு ; நல்லறிவு ; வழக்கின் திடம் ; பயன் . |
| உறுதிக்கட்டுரை | கழறல் , இடித்துக் கூறுகை . |
| உறுதிச்சீட்டு | உறுதிப்படுத்தி எழுதித்தரும் ஆவணம் . |
| உறுதிச்சுற்றம் | உற்ற துணைவர் . |
| உறுதிச்சொல் | உறுதிமொழி ; நல்லுபதேசம் ; கண்டிப்பு , இடித்துரை . |
| உறுதிப்படுதல் | நிலைப்படுதல் ; பலப்படுதல் ; சாதன முடித்தல் . |
| உறுதிப்பத்திரம் | எழுத்துறுதி ; உறுதிச்சீட்டு ; நம்பிக்கைப் பத்திரம் . |
| உறுதிப்பாடு | திடம் , வல்லமை ; வாக்குறுதி . |
| உறுதிப்பொருள் | கடவுள் ; அறிவு ; உண்மைப் பொருள் ; நன்மை பயக்கும் பொருள் . |
| உறுதிமொழி | உறுதிச்சொல் ; பிரமாணமாகச் சொல்லும் வார்த்தை . |
| உறவாக்குதல் | உறவினனாகச் செய்தல் ; சமாதானப்படுத்துதல் . |
| உறவாடுதல் | உறவு கொண்டாடுதல் ; நட்புச் செய்தல் . |
| உறவாளி | உறவாகக் கொண்டவன் , உறவினன் . |
| உறவி | எறும்பு ; உறவு ; உயிர் ; உலைக்களம் ; நீர் ஊற்று ; கிணறு ; மலைமுருங்கை . |
| உறவின்முறையார் | உறவினர் , சுற்றத்தார் . |
| உறவு | உறுகை ; பொருத்தம் ; சேர்க்கை ; சம்பந்தம் ; சுற்றம் ; நட்பு ; ஒற்றுமை ; விருப்பம் . |
| உறவுகலத்தல் | புதிய உறவு உண்டாதல் ; உறவு பாராட்டுதல் ; இனத்தாருடன் சேர்ந்திருத்தல் . |
| உறவுமுரிதல் | நட்புக் கெடுதல் . |
| உறவுமுறை | ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பு . |
| உறழ்கலி | கலிப்பாவகை . |
| உறழ்குறித்தல் | வாது செய்யக் கருதல் . |
| உறழ்ச்சி | உறழ்வு , மாறுபாடு ; திரிதல் ; பெருக்கல் . |
| உறழ்தல் | ஒத்தல் ; மாறுபாடு ; விகற்பித்தல் ; செறிதல் ; பெருக்குதல் ; மிகுதல் ; திரிதல் ; இடையிடுதல் ; உவமித்தல் ; வீணையில் ஒரு நரம்பை விட்டு ஒரு நரம்பைத் தெறித்தல் ; எண் கூட்டிப் பெருக்கல் ; எதிராதல் . |
| உறழ்ப்பு | காந்தார பஞ்சமம் ; நெருக்கம் . |
| உறழ்பொரு | உவமையினும் பொருளை மிகுத்துக் கூறும் ஒப்புமைவகை . |
| உறழ்பொருள் | ஒப்பு மாறுபடக் கூறுவது ; ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படும் பொருள் . |
| உறழ்வு | உறழ்ச்சி ; மாறுபாடு , பகை ; போர் ; இடையீடு ; ஒப்பு ; செறிவு ; காலம் ; எண் பெருக்குகை ; உணர்வு . |
| உறழ | ஓர் உவமவுருபு . |
| உறன்முறை | உறவுமுறை , உறவுமுறைத் தன்மை . |
| உறாதவன் | நொதுமலன் , பகையும் நட்பும் இல்லாதவன் . |
| உறாமை | பொருந்தாமை ; விருப்பு வெறுப்பின்மை ; தகாத செய்கை . |
| உறார் | பகைவர் . |
| உறாவரை | முற்றூட்டு ; பிறர் உள்ளே வாராத எல்லையை உடைய நிலம் . |
| உறாவுதல் | சோர்தல் ; வருத்தம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 178 | 179 | 180 | 181 | 182 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உறவாக்குதல் முதல் - உறுதிமொழி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உறவு, உறிஞ்சுதல், பொருள், மாறுபாடு, அதட்டுதல், உறுக்குதல், திடம், உள்ளே, செய்தல், உறுதிமொழி, உறுதிச்சொல், உறழ்வு, ஒப்பு, மாறுபடக், பெருக்கல், திரிதல், உறழ்ச்சி, உறுதிச்சீட்டு, உறவுமுறை, உறுதி, முறை, அதிகாரம், பேசும், உறுக்கிப், வாங்கல், போர், செலுத்துகை, பற்றுக்கோடு, மிகுதல், நன்மை, உண்டாதல், உறுத்துதல், பொருளை, பத்திரம்

