தமிழ் - தமிழ் அகரமுதலி - அடிமுடி முதல் - அடுக்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அடியாள் | குற்றேவல் செய்வோன்(ள்) ; எதரியை அடிப்பதற்காகக் கூலிக்கு அமர்த்தப்படும் ஆள் . |
| அடியான் | தொண்டன் ; ஏவலாளன் ; பண்ணையாள் . |
| அடியிடுதல் | தொடங்குதல் ; அடியெடுத்து வைத்தல் , கால்வைத்தல் ; கூடை முதலியன முடைதற்கு அடியமைத்தல் . |
| அடியியைபுதொடை | செய்யுளின் அடிதோறும் இறுதி ஒன்றிவரத் தொடுப்பது . |
| அடியிலேயுறைதல் | வழிபடுதல் ; எண்ணெய் முதலியவற்றின் கசடு கீழ்ப்பகுதியில் தங்கிக் கெட்டிப்படுதல் . |
| அடியீடு | அடியிட்டு நடத்தல் ; தொடக்கம் . |
| அடியுணி | அடிபட்டவன் . |
| அடியுரம் | முன்பு இட்ட எரு ; மரத்தைச் சுற்றியிடும் எரு ; ஆற்றல் ; முந்தையோர் சொத்து . |
| அடியுறை | பாதகாணிக்கை ; வழிபட்டுறைகை ; ஒரு வணக்கமொழி ; தொண்டன் . |
| அடியெடுத்தல் | அப்பாற்போதல் ; அடிவைத்தல் . |
| அடியெதுகை | அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது . |
| அடியேன் | அடியவனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி . |
| அடியொட்டி | காலடியை எடுக்கவொட்டாமல் பிடிப்பது ; காலில் தைக்கும்படி நட்டுவைக்கும் கருவி . |
| அடியொத்த காலம் | தன் நிழல் தன் அடியிலேயேவிழும் பொழுது , நடுப்பகல் . |
| அடியொற்றுதல் | பின்பற்றுதல் . |
| அடியோடு | முழுவதும் . |
| அடிவட்டம் | காலடி அளவு ; நாகசுரத்தின் அடிப்பூண் . |
| அடிவயிறு | கீழ்வயிறு . |
| அடிவரலாறு | காரணம் ; பழைய வரலாறு ; குலமுறை . |
| அடிவரவு | பாட்டின் முதற்குறிப்பு . |
| அடிவருடல் | கால்பிடித்தல் . |
| அடிவரையறை | அடியெல்லை ; அடிக்கணக்கு . |
| அடிவாரம் | மலைச்சாரல் ; மலையின் அடிப்பகுதி . |
| அடிவானம் | திசைமுடிவு , கீழ்வானம் ; அடிப்படை . |
| அடிவிரிதல் | அடிப்பகுதி விரிசல் காணல் ; பாண்டத்தினடி பழுதாதல் . |
| அடிவிள்ளுதல் | அடிப்பகுதி விரிசல் காணல் ; பாண்டத்தினடி பழுதாதல் . |
| அடிவினை | ஆடை வெளுத்தல் ; சூழ்வினை ; மாறாட்டம் ; கறுவு . |
| அடிவீழ்ச்சி | அடிசாய்தல் , வணக்கம் . |
| அடிவீழ்தல் | தண்டனிடுதல் , காலில் விழுந்து வணங்கல் . |
| அடிவெண்குருத்து | இறகினடி ; பாங்குருத்து , இளங்குருத்து . |
| அடிவைத்தல் | காலடி வைத்தல் ; தொடங்குதல் ; நடக்கப் பழகுதல் ; தலையிடல் . |
| அடு | (வி) சமை , தீயிற் பாகமாக்கு ; சேர் . |
| அடுக்கடுக்காய் | வரிசை ; வரிசையாய் . |
| அடுக்கம் | ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது ; குவிக்கை ; செறிவு ; படுக்கை ; மலைப்பக்கம் , பக்கமலை ; வரிசை ; மரநெருக்கம் ; சோலை . |
| அடுக்கல் | அடுக்கு ; அடுக்கப்பட்டது ; ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்தல் ; மலை ; பாறை ; படுக்கை ; குவித்தல் ; தொகுத்தல் . |
| அடுக்கலிடுதல் | நெல் முதலியவற்றை இரண்டாம் முறை குற்றுதல் . |
| அடுக்களை | சமையலறை , மடைப்பள்ளி . |
| அடுக்களைகாணுதல் | திருமணத்தை யடுத்துத் தாய் தன் மகளின் இல்லத்திற்கு முதன் முறையாகச் செல்லுகை . |
| அடுக்கு | அடுக்கப்பட்டது ; ஒழுங்கு ; வரிசை ; அடுக்குச் சொல் . |
| அடிமுடி | ஆதியந்தம் ; கீழ்மேல் ; கால்முதல் தலைவரை ; வரலாறு . |
| அடிமுண்டம் | வெட்டிய மரத்தின் அடிப்பாகம் ; பயனற்றவன்(ள்) . |
| அடிமுந்தி | அடிமுன்றானை . |
| அடிமை | தொண்டுபடும் தன்மை ; அடிமையாள் ; தொண்டன் . |
| அடிமைப்படல் | அடிமையாதல் . |
| அடிமைபூணல் | அடிமையாதல் . |
| அடிமையோலை | அடிமைப் பத்திரம் . |
| அடிமோனைத்தொடை | அடிகள்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது . |
| அடியடியாக | ஒவ்வோர் அடியாக ; தலைமுறை தலைமுறையாக . |
| அடியந்திரம் | திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகள் . |
| அடியல் | கதிரடிக்கை ; சொரிகை ; தொடர்கை . |
| அடியவன் | அடிமை ; தொண்டன் . |
| அடியளபெடைத்தொடை | அடிகள்தோறும் முதலில் அளபெடைவரத் தொடுப்பது . |
| அடியறிதல் | முதற்காரணம் தெரிதல் . |
| அடியறுக்கி | மட்கலம் அறுக்கும் கருவி . |
| அடியறுத்தல் | அடியோடு களைதல் , முற்றும் நீக்குதல் . |
| அடியனாதி | தொன்மைக்காலம் , தொன்று தொட்டுள்ளது . |
| அடியாகுஎதுகை | காண்க : அடியெதுகை . |
| அடியாட்டி | அடியாள் , அடிமை வேலை செய்பவள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடிமுடி முதல் - அடுக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தொடுப்பது, தொண்டன், ஒன்றிவரத், அடிப்பகுதி, வரிசை, அடிமை, வைத்தல், பழுதாதல், பாண்டத்தினடி, விரிசல், காணல், அடுக்கப்பட்டது, அடிகள்தோறும், அடிமையாதல், அடுக்கு, படுக்கை, ஒன்றாய், அடியோடு, வணக்கமொழி, அடிவைத்தல், அடிதோறும், தொடங்குதல், அடியாள், அடியெதுகை, இரண்டாம், சொல், காலடி, கருவி, காலில், எழுத்து, வரலாறு

