தமிழ் - தமிழ் அகரமுதலி - உள்ளபடி முதல் - உள்ளொற்றுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உள்ளாடுதல் | உடன் கலந்து திரிதல் ; உளவு அறிய உள்ளே பயிலல் . |
| உள்ளாடை | மகளிர் அணியும் உள்ளுடை . |
| உள்ளாதல் | உள்ளாகுதல் , உட்படுதல் , வசப்படுதல் ; உடன்படுதல் . |
| உள்ளாந்தரங்கம் | மிகுந்த அந்தரங்கம் . |
| உள்ளாயுதம் | தடிக்குள் அடங்கிய கத்தி . |
| உள்ளார் | இருப்போர் ; உடையவர் ; பகைவர் ; செல்வர் . |
| உள்ளால் | உட்பக்கம் . |
| உள்ளாலை | உட்பக்கம் . |
| உள்ளாள் | உள்ளாகப் பயிலும் ஆள் , உளவறிவோர் . |
| உள்ளாளம் | இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி ; கூத்து வேறுபாடு . |
| உள்ளாளனம் | இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி ; கூத்து வேறுபாடு . |
| உள்ளான் | உளவறிபவன் ; ஒரு பறவைவகை ; உற்றவன் ; போரடிக்குந் தலைமாடு . |
| உள்ளி | வெள்ளைப்பூண்டு ; வெங்காயம் . |
| உள்ளிட்டார் | கூட்டாளிகள் ; தொகைக்கு உட்பட்டவர் ; முதலானவர் . |
| உள்ளிடுதல் | உட்படுதல் , உள்ளடக்குதல் ; தொகைக்கு உட்படுதல் . |
| உள்ளிடை | உள்ளிடம் ; உட்கருத்து , மறை . |
| உள்ளிடையானவன் | இனத்தான் . |
| உள்ளித்திரி | உள்ளிப்பூண்டின் உள்ளிருக்கும் பகுதி , உள்ளிப்பரல் . |
| உள்ளிப்பல் | உள்ளிப்பூண்டின் உள்ளிருக்கும் பகுதி , உள்ளிப்பரல் . |
| உள்ளிப்பூண்டு | பூண்டுவகை , வெள்ளைப்பூண்டு ; வெங்காயம் . |
| உள்ளிருப்பு | வைத்திருக்கும் செல்வம் ; வைப்பு நிதி ; சேமிப்பு நிதி . |
| உள்ளிவிழா | பண்டைக்காலத்திலே கருவூரில் நிகழ்ந்த திருவிழா . |
| உள்ளீடு | உள்ளிருக்கும் சத்துப்பொருள் ; உள்ளே இடப்பட்டது ; உட்கருத்து ; உறுதியான உட்பக்கம் ; அறிவு ; உடன்படிக்கை ; கமுக்கம் ; உள்ளே இடுவது . |
| உள்ளு | உள்ளான் பறவை . |
| உள்ளுக்குக்கொடுத்தல் | உண்ணும்படி மருந்து கொடுத்தல் . |
| உள்ளுக்குள்ளே | உள்ளே , மனத்துக்குள் . |
| உள்ளுச்செல்லுதல் | நினைவோடுதல் . |
| உள்ளுடன் | உள்ளே கிடப்பது ; பணியாரத்தின் உள்ளீடு . |
| உள்ளுடை | மேலே அணியும் ஆடைக்கு உள்ளாகக் கட்டும் உடை ; உள்வேட்டி ; கோவணம் . |
| உள்ளுடைதல் | மனம் முரிதல் ; முழுதும்சிதைதல் . |
| உள்ளுதல் | நினைதல் ; ஆராய்தல் ; நன்கு மதித்தல் ; மீண்டும் நினைத்தல் ; இடைவிடாது நினைத்தல் . |
| உள்ளுயிர் | உள்ளே கலந்திருக்கும் ஆன்மா ஆகிய கடவுள் . |
| உள்ளுயிர்க்குன்று | நத்தை . |
| உள்ளுருக்கி | கணைநோய் . |
| உள்ளுருகுதல் | மனங்கரைதல் . |
| உள்ளுளவு | உடந்தை . |
| உள்ளுறுத்தல் | உட்செலுத்துதல் ; உட்கருதுதல் ; உள்ளிடுதல் , உட்புகுதல் , நினைக்கச் செய்தல் . |
| உள்ளுறுதல் | உட்படுதல் , உள்ளாதல் . |
| உள்ளுறை | உட்பொருள் ; உட்கருத்து ; உள்ளெண்ணம் ; உள்ளிருக்கும் பொருள் ; மறைபொருள் ; உள்ளுறையுவமம் ; பொருளடக்கம் . |
| உள்ளுறையுவமம் | வெளிப்படையல்லாத உவமம் , வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாகக் கருப்பொருண்மேல் ஏற்றிக் கூறும் உவமம் . |
| உள்ளூர் | ஊர்நடு ; சொந்த ஊர் . |
| உள்ளூர்ச்சரக்கு | சொந்த ஊரில் விளையும் பொருள் . |
| உள்ளெரிச்சல் | பொறாமை . |
| உள்ளேபோடுதல் | தன்வசப்படுத்தல் . |
| உள்ளொடுக்கம் | தன்னடக்கம் . |
| உள்ளொற்றுதல் | உள்நிகழ்வை உய்த்துணர்தல் . |
| உள்ளபடி | உண்மையாக ; தக்க அளவு , உண்டான அளவு . |
| உள்ளபிள்ளை | செல்வக்குழந்தை . |
| உள்ளம் | மனம் ; உள்ளக்கருத்து ; சொற்றொடரின் கருத்து ; எண்ணம் ; ஞானம் ; அகச்சான்று ; ஆன்மா ; ஊக்கம் ; முயற்சி ; உல்லம் ; உல்லமீன்வகை . |
| உள்ளமட்டும் | இருக்கிறவரையில் . |
| உள்ளமிகுதி | ஊக்கம் , மனவெழுச்சி . |
| உள்ளமை | உண்மை , உளதாயிருக்கும் தன்மை . |
| உள்ளரங்கம் | அந்தரங்கம் , உள்ளிடம் . |
| உள்ளல் | உள்ளான் குருவி ; உள்ளான் மீன் ; உள்ளுதல் ; நினைத்தல் , எண்ணுதல் ; மகிழ்தல் ; கருதல் ; எண்ணியிரங்கல் . |
| உள்ளலார் | பகைவர் . |
| உள்ளவன் | உடையவன் ; பொருளுடையவன் , செல்வன் . |
| உள்ளழிதல் | மனம் அழிதல் . |
| உள்ளளவும் | காண்க : உள்ளமட்டும் . |
| உள்ளறை | உள்வீடு ; பெட்டியின் உள்ளறை ; அந்தரங்க அறை . |
| உள்ளன் | உள்ளேயிருப்பவன் ; உற்ற நட்பினன் ; போரடிக்கும் தலைமாடு . |
| உள்ளாக்குதல் | உட்படச்செய்தல் , வசப்படுத்தல் . |
| உள்ளாடுசத்துரு | உற்றவன்போல நடிக்கும் பகைவன் , உட்பகைஞன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 175 | 176 | 177 | 178 | 179 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளபடி முதல் - உள்ளொற்றுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உள்ளே, உள்ளான், உட்படுதல், உள்ளிருக்கும், உட்பக்கம், மனம், உட்கருத்து, நினைத்தல், உள்ளீடு, உள்ளிப்பரல், உள்ளிப்பூண்டின், பகுதி, நிதி, ஆன்மா, ஊக்கம், உள்ளமட்டும், உள்ளறை, அளவு, சொந்த, பொருள், உள்ளுறையுவமம், உவமம், உள்ளுதல், தொகைக்கு, இசைவகை, ஒற்றின், மாத்திரை, பகைவர், அந்தரங்கம், அணியும், உள்ளுடை, உள்ளாதல், தோன்ற, இசைக்கும், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், உள்ளிடுதல், தலைமாடு, வேறுபாடு, ஆளத்தி, கூத்து, உள்ளிடம்

