தமிழ் - தமிழ் அகரமுதலி - உட்கோயில் முதல் - உடலுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உடம்பொடு புணர்தல் | நூலுக்குரிய உத்திவகையுள் ஒன்று ; கூறும் இலக்கியத்திலேயே சொல்ல வேண்டியதொன்றை உய்த்துணர வைத்தல் . |
| உடர் | உடல் . |
| உடல் | உடம்பு ; மெய்யெழுத்து ; பிறவி ; உயிர்நிலை ; சாதனம் ; பொன் ; பொருள் ; ஆடையின் கரையொழிந்த பகுதி ; மாறுபாடு . |
| உடல்வாசகம் | நடுச்செய்தி ; கடிதம் , உறுதிப்பத்திரம் முதலியவற்றின் முன்னுரையும் இறுதியுரையும் நீங்கிய பகுதி . |
| உடலந்தம் | உடலின் அழிவு , இறப்பு . |
| உடலம் | உடம்பு . |
| உடலவருத்தனை | மெய்யாற் செய்யும் அபிநயம் . |
| உடலிலான் | உருவில்லாத காமன் . |
| உடலுதல் | சினத்தல் ; மாறுபடுதல் ; போர்புரிதல் ; ஆசையால் வருத்தமுறல் . |
| உட்சமயம் | சைவசமயத்துள்ள உட்பிரிவுகள் ; காண்க : அகச்சமயம் . |
| உட்சாத்து | அரைக்கச்சை . |
| உட்சூத்திரம் | பொறியின் மூலக்கருவி ; உட்குறிப்பு ; கணிதத்தில் குறுக்குவழி ; எளியவழி ; உள்ளுபாயம் . |
| உட்செல் | நெஞ்சொடு கூறல் . |
| உட்செலுத்துதல் | உள்ளே செலுத்துதல் ; தந்திரமாக உள்ளே புகுவித்தல் ; இலஞ்சம் கொடுத்தல் . |
| உட்சேபணம் | எழும்புதல் ; எறிதல் ; விசிறி . |
| உட்டணம் | வெப்பம் ; முதுவேனில் ; மிளகு ; உறைப்பு . |
| உட்டணித்தல் | வெப்பங்கொள்ளுதல் . |
| உட்டிரம் | களர்நில்ம் ; தேட்கொடுக்கிப் பூண்டு , முட்செவ்வந்தி . |
| உட்டினீடம் | தலைப்பாகை . |
| உட்டீனம் | பறவைகளின் கதிச் சிறப்புகளுள் ஒன்று . |
| உட்டுளை | குழல் , புரை . |
| உட்டுறவு | உள்ளத்துறவு . |
| உட்டெளிவு | உள்ளத்தெளிவு ; வடித்த சாறு ; உள்வயிரம் ; உட்பக்க அளவு . |
| உட்டை | விளையாட்டுக்காய் . |
| உட்பகை | நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை ; உள்ளாகி நிற்கும் பகை ; அறுபகை ; குடிகளின் எதிர்ப்பு . |
| உட்பகை ஆறு | காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் என்னும் ஆறு குற்றங்கள் . |
| உட்பட | உள்ளாக . |
| உட்படி | தராசில் இடும் படிக்கல் எவ்வளவு குறைகின்றது என்பதை அறிய இடும் சிறு படிக்கல் முதலியன . |
| உட்படுத்தல் | அகப்படுத்தல் , உள்ளாகச் செய்தல் ; உடன்படுத்தல் . |
| உட்படுதல் | உள்ளாதல் ; கீழாதல் ; அகப்படுதல் ; உடன்படுதல் ; சேர்தல் . |
| உட்பந்தி | அகப்பந்தி , விருந்தில் தலைவரிசை . |
| உட்பலம் | அக வலிமை ; அவை : படைவலிமை , பொருள்வலிமை , துணைவலிமை , உடல் வலிமை , அகவலிமை , மூலப்படை என்பன . |
| உட்பற்று | அகப்பற்று . |
| உட்புகுதல் | உள்ளே நுழைதல் ; ஆழ்ந்து நோக்குதல் . |
| உட்புரவு | அரசாங்கத்தைச் சாராத அறப்புறம் . |
| உட்புரை | உட்டுளை ; உள்மடிப்பு ; அந்தரங்கம் . |
| உட்பூசை | மானச பூசை , உள்ளத்தே தியான முறையில் செய்யப்படும் வழிபாடு . |
| உட்பொருள் | உண்மைக் கருத்து ; மறைபொருள் . |
| உடக்கரித்தல் | காண்க : உடற்கரித்தல் . |
| உடக்கு | திருகாணிச் சுரையின் உட்சுற்று ; உடல் ; உள்ளீடின்மை . |
| உடக்குதல் | செலுத்தல் ; நாணிற் செறிதல் ; எய்தல் ; உள்ளீடின்றி இருத்தல் . |
| உடக்கெடுத்துப்போதல் | உடம்பு மிக மெலிதல் . |
| உடங்கு | பக்கம் ; ஒத்து ; ஒருபடியாக ; சேர ; உடனே . |
| உடசம் | இலைக்குடில் ; வீடு ; வெட்பாலை . |
| உடந்தை | கூட்டுறவு ; சேர்க்கை ; துணை ; உறவு . |
| உடப்பு | துறட்டுமுள்ளிச்செடி ; துறட்டுமுள் . |
| உடம் | இலை ; புல் ; விடியற்காலம் ; வேலமரம் . |
| உடம்படல் | உடன்படல் . |
| உடம்படிக்கை | உடன்படிக்கை ; பொருத்தச்சீட்டு . |
| உடம்படுதல் | சம்மதப்படுதல் , மனம் ஒத்தல் . |
| உடம்படுமெய் | நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்களாகிய ய் , வ் . |
| உடம்பாடு | ஒற்றுமை ; சம்மதம் ; மனப் பொருத்தம் . |
| உடம்பிடி | வேலாயுதம் . |
| உடம்பு | உடல் , உயிர்நிலை ; மெய்யெழுத்து ; ஆண் அல்லது பெண்ணின் குறி . |
| உடம்புக்கீடு | கவசம் . |
| உடம்புரட்டல் | உடலிலிருந்து அழுக்கைத் திரட்டியெடுத்தல் ; குழந்தை புரளுகை . |
| உடம்புரட்டுதல் | உடலிலிருந்து அழுக்கைத் திரட்டியெடுத்தல் ; குழந்தை புரளுகை . |
| உடம்பெடுத்தல் | பிறத்தல் ; செயலுடையனாதல் . |
| உடம்பை | கலங்கல் நீர் . |
| உட்கோயில் | கோயில் கருவறை . |
| உட்கோள் | உட்கருத்து ; கோட்பாடு ; ஓர் அணி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 148 | 149 | 150 | 151 | 152 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உட்கோயில் முதல் - உடலுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உடல், உடம்பு, உள்ளே, உடலிலிருந்து, வலிமை, அழுக்கைத், குழந்தை, புரளுகை, படிக்கல், திரட்டியெடுத்தல், உட்டுளை, உயிர்நிலை, மெய்யெழுத்து, பகுதி, காண்க, உட்பகை, ஒன்று, இடும்

