தமிழ் - தமிழ் அகரமுதலி - இளவேனில் முதல் - இற்றைநாள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இற்றுப்போதல் | நைந்துபோதல் ; அழுகிப் போதல் ; முரிந்துபோதல் . |
| இற்றும் | இன்னும் , மேலும் . |
| இற்றுவிழுதல் | நைந்து கெட்டுவிடுதல் ; முரிந்து விழல் . |
| இற்றை | இன்றைக்கு ; இன்று ; இந்நாள் . |
| இற்றைத்தினம் | இன்று . |
| இற்றைநாள் | இன்று . |
| இளிகண் | பீளைக்கண் . |
| இளிச்சகண்ணி | காமக் குறிப்போடு பிறரை நோக்கும் தன்மையுடையாள் . |
| இளிச்சவாயன் | எப்போதும் பல்லைக் காட்டுவோன் ; எளிதில் ஏமாற்றபடுபவன் ; அப்பாவி ; நுட்ப புத்தியில்லாதவன் . |
| இளிச்சற்கண் | காண்க : இளிகண் . |
| இளித்தல் | பல்லைக் காட்டுதல் ; பல்லைக் காட்டிச் சிரித்தல் ; கேலி செய்தல் . |
| இளித்தவாய்ப் பட்டம் | இளித்தவாயன் எனப்படுகை . |
| இளித்தவாயன் | காண்க : இளிச்சவாயன் . |
| இளிதல் | இணுங்குதல் ; உரித்தல் ; இகழப்பட்டு எளியனாதல் . |
| இளிந்தகாய் | இணுங்கின காய் ; பாக்கு . |
| இளிப்படுதல் | அகப்படுதல் ; எளிமையாதல் . |
| இளிப்பு | பல்லிளிக்கை ; பல் காட்டுதல் ; இழிவு ; நிந்தை . |
| இளிம்பு | திறமையின்மை . |
| இளிவரல் | இழிப்புச்சுவை ; இழிவு . |
| இளிவரவு | இகழ்ச்சி ; சிறுமை ; இழிதொழில் . |
| இளிவு | இழிவு ; இகழ்ச்சி ; இழிதகவு ; அருவருப்பு ; அவலச்சுவை நான்கனுள் ஒன்று ; நிந்தை . |
| இளை | தலைக்காவல் ; காவற்காடு ; கட்டுவேலி ; பூமி ; இளமை ; இளையாள் ; தம்பி ; தங்கை ; மேகம் ; பசு ; திருமகள் ; காவல் . |
| இளைச்சி | தங்கை . |
| இளைஞன் | இளவல் ; தம்பி ; சிறுவன் ; இளையோன் . |
| இளைத்தல் | சோர்தல் , தளர்தல் ; மெலிதல் ; இரங்கல் ; பின்னிடுதல் , தோற்றுப்போதல் ; வளங்குன்றுதல் . |
| இளைத்தோர் | எளியவர் . |
| இளைது | இளையது , முதிராதது . |
| இளைப்படுதல் | வலையில் அகப்படுதல் . |
| இளைப்பம் | காண்க : இளப்பம் . |
| இளைப்பாற்றி | களைப்பைப் போக்குவது . |
| இளைப்பாற்றுதல் | இளைப்பாறச் செய்தல் ; களைப்பைப் போக்குதல் ; ஓய்ந்திருத்தல் . |
| இளைப்பாறுதல் | விடாய் தீர்த்தல் ; களைப்பு நீங்கல் ; ஓய்ந்திருத்தல் . |
| இளைப்பாறு மண்டபம் | வசந்த மண்டபம் . |
| இளைப்பு | களைப்பு ; சோர்வு ; வருத்தம் ; மெலிவு ; தொய்வு . |
| இளைமை | காண்க : இளமை . |
| இளைய தம்பி | இளையவனுக்கு இளையவன் . |
| இளைய பிள்ளையார் | முருகக் கடவுள் . |
| இளையபெருமாள் | இலக்குமணண் . |
| இளையர் | இளைஞர் ; பணியாளர் . |
| இளையவர் | இளம்பெண்கள் . |
| இளையவள் | இளமைத் தன்மையுடையவள் ; தங்கை ; திருமகள் ; இளைய மனைவி . |
| இளையவன் | ஆண்டில் குறைந்தவன் ; தம்பி ; முருகன் . |
| இளையள் | தங்கை ; திருமகள் ; பெண் ; இளைய மனைவி . |
| இளையாள் | தங்கை ; திருமகள் ; பெண் ; இளைய மனைவி . |
| இளையன் | இளையவன் , தம்பி . |
| இளையான் | இளையவன் , தம்பி . |
| இளையார் | பெண்கள் ; தோழியர் . |
| இளையாழ்வார் | இராமானுசர் ; இலக்குவன் . |
| இளையெள் | முற்றாத எள் . |
| இளையோன் | காண்க : இளையவன் . |
| இளைவலி | கரிக்காடு . |
| இற்கடை | வீட்டுவாயில் . |
| இற்கிழத்தி | இல்லக் கிழத்தி , மனையாள் . |
| இற்செறித்தல் | தலைவியின் அகவை முதிர்ச்சி நோக்கிப் பெற்றோர் அவளை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்தல் . |
| இற்செறிப்பார் | வீட்டில் சேர்ப்பார் . |
| இற்செறிப்புணர்த்தல் | தலைவி இல்லக் காவலில் வைக்கப்பட்டிருத்தலைத் தோழி தலைவனுக்கு உணர்த்துதல் . |
| இற்செறிப்பு | காண்க : இற்செறித்தல் . |
| இற்செறிவு | காண்க : இற்செறித்தல் . |
| இற்பரத்தை | காமக்கிழத்தியாகக் கொண்ட பரத்தை . |
| இற்பாலர் | நற்குடியிற் பிறந்தவர் . |
| இற்பிறப்பு | நல்ல குடியிற் பிறத்தல் ; உயர்குடிப் பிறப்பு . |
| இற்புலி | பூனை . |
| இற்றி | காண்க : இத்தி . |
| இற்றிசை | இல்லறம் . |
| இற்று | இத்தன்மைத்து ; ஒரு சாரியை . |
| இளவேனில் | வசந்த காலம் , சித்திரை வைகாசி மாதங்கள் . |
| இளாவிருதம் | நன்னீர்க் கடலாற் சூழப் பெற்ற நிலப்பகுதி , ஒன்பது கண்டத்துள் ஒன்று . |
| இளி | இகழ்ச்சி ; குற்றம் ; சிரிப்பு ; இகழ்ச்சிக் குறிப்பு ; நகை ; யாழின் நரம்புகளுள் ஒன்று ; ஒருவகைச் சுரம் ; இழிவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 137 | 138 | 139 | 140 | 141 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளவேனில் முதல் - இற்றைநாள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தம்பி, இளைய, தங்கை, இளையவன், திருமகள், இழிவு, மனைவி, இன்று, பல்லைக், ஒன்று, இகழ்ச்சி, இற்செறித்தல், செய்தல், மண்டபம், களைப்பு, வசந்த, ஓய்ந்திருத்தல், பெண், இல்லக், இளையாள், காட்டுதல், இளிச்சவாயன், இளிகண், இளித்தவாயன், அகப்படுதல், இளையோன், இளமை, நிந்தை, களைப்பைப்

