தமிழ் - தமிழ் அகரமுதலி - இடியப்பம் முதல் - இடும்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இடுநெறி | புதியநெறி . |
| இடுப்பு | இடை ; அரை ; ஒக்கலை ; மறைவுறுப்பு . |
| இடுப்புக்கட்டுதல் | சண்டை பிடிக்க முந்துதல் . |
| இடுப்புவலி | இடுப்பு நோவு ; மகப்பேற்றின் போது உண்டாகும் வலி . |
| இடுபலம் | பேய்ப்புடல் . |
| இடுபெயர் | இடுகுறிப்பெயர் ; |
| இடுபொருள் | பிறர் வரவிட்ட பொருள் . |
| இடும்பர் | ஒருவகைச் சாதியார் ; இராக்கதர் ; செருக்கர் ; துயர் செய்வோர் . |
| இடும்பன் | செருக்குள்ளவன் ; ஓர் அரக்கன் ; முருகக் கடவுளின் கணத் தலைவன் . |
| இடும்பி | செருக்குடையவள் ; ஓர் அரக்கி . |
| இடும்பு | அகந்தை ; கொடுஞ்செயல் ; குறும்பு . |
| இடியாப்பம் | சிற்றுண்டிவகை . |
| இடியம்பு | காண்க : இடிகொம்பு . |
| இடியல் | பிட்டு . |
| இடியேறு | பேரிடி . |
| இடிவு | அழிவு ; இடிந்து விழுகை . |
| இடுக்கடி | துன்பம் . |
| இடுக்கண் | மலர்ந்த நோக்கமின்றி மையல் நோக்கம்பட வரும் இரக்கம் ; துன்பம் ; வறுமை . |
| இடுக்கணழியாமை | துன்பக் காலத்து மனங்கலங்காமை . |
| இடுக்கணி | இடுக்கான இடம் . |
| இடுக்கம் | ஒடுக்கம் ; துன்பம் ; நெருக்கம் ; வறுமை . |
| இடுக்கல் | சந்து . |
| இடுக்காஞ்சட்டி | விளக்குத் தகழி . |
| இடுக்கி | குறடு ; எலிப்பொறி ; கடும்பற்றுள்ளன் ; நண்டு முதலியவற்றின் கவ்வும் உறுப்பு . |
| இடுக்கிச்சட்டம் | கம்பிச்சட்டம் . |
| இடுக்கிடை | நெருக்கம் . |
| இடுக்கு | முடுக்கு : மூலை ; இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம் ; கவ்வும் உறுப்பு ; சங்கடம் ; இவறல் . |
| இடுக்குத்தடி | கள்ளூறும்படி பாளையை நெருக்கிப் பிடிக்கவைக்கும் இரட்டைத் தடி . |
| இடுக்குத் திருத்துழாய் | திருமால் கோயிலில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத்துக் கொடுக்கும் துளசி . |
| இடுக்குதல் | கவ்வுதல் ; அணைத்தல் ; நெருக்குதல் . |
| இடுக்குப்பனை | கள்ளும் பதநீரும் உண்டாக்கும் பனை . |
| இடுக்குப்பிள்ளை | கைக்குழந்தை . |
| இடுக்குப்பொட்டணி | கக்கப்பாளம் , கக்கத்தில் இடுக்கிச் செல்லத்தக்க பொருள் . |
| இடுக்குமரம் | கடவை மரம் , வேலித்திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம் ; செக்குவகை . |
| இடுக்குமுடுக்கு | மூலைமுடுக்கு ; முட்டுச்சந்து ; சங்கடம் . |
| இடுக்குவழி | சந்து வழி , மிகக் குறுகலான பாதை . |
| இடுக்குவாசல் | சிறு நுழைவாசல் , திட்டிவாசல் . |
| இடுக்குவார் கைப்பிள்ளை | காண்க : எடுப்பார் கைப்பிள்ளை . |
| இடுகடை | பிச்சையிடும் வீட்டுவாயில் . |
| இடுகளி | அதிமதுரத் தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாகும் மதம் . |
| இடுகறல் | விறகு . |
| இடுகாடு | பிணம் புதைக்கும் இடம் ; சுடுகாடு , |
| இடுகால் | பீர்க்கு . |
| இடுகிடை | சிற்றிடை ; சிறுவழி . |
| இடுகு | ஒடுக்கம் . |
| இடுகுதல் | ஒடுங்குதல் ; சிறுகுதல் ; சுருங்குதல் . |
| இடுகுறி | இடுகுறிப்பெயர் ; பெற்றோர் இடும் பெயர் ; முற்காலத்தில் நெல்லைச் சேமித்துவைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம் . |
| இடுகுறிப்பெயர் | காரணம் பற்றாது வழங்கி வரும் பெயர் . |
| இடுகுறிமரபு | இடுகுறியாகத் தொன்றுதொட்டு வரும் பெயர் . |
| இடுகுறியாக்கம் | இடுகுறியாக ஒருவன் கொடுத்த அல்லது ஆக்கிக்கொண்ட பெயர் . |
| இடுகை | ஈகை , கொடை . |
| இடுங்கலம் | கொள்கலம் , குதிர் . |
| இடுங்கற்குன்றம் | செய்குன்று . |
| இடுங்குதல் | உள்ளொடுங்குதல் ; சுருங்குதல் . |
| இடுசிவப்பு | செயற்கைச் சிவப்பு . |
| இடுதங்கம் | புடமிட்ட தங்கம் ; இழைப்புத் தங்கம் . |
| இடுதண்டம் | அபராதம் . |
| இடுதல் | வைத்தல் ; போகடுதல் ; பரிமாறுதல் ; கொடுத்தல் ; சொரிதல் ; குத்துதல் ; அணிவித்தல் ; உவமித்தல் ; குறியிடுதல் ; ஏற்றிச்சொல்லுதல் ; சித்திரமெழுதுதல் ; உண்டாக்குதல் ; முட்டையிடுதல் ; கைவிடுதல் ; புதைத்தல் ; பணிகாரம் முதலியன உருவாக்குதல் ; தொடுத்துவிடுதல் ; செய்தல் ; தொடங்குதல் ; வெட்டுதல் ; ஒரு துணைவினை . |
| இடுதி | அம்புக் கூடு . |
| இடுதிரை | திரைச்சீலை . |
| இடுதேளிடுதல் | பொய்க்காரணங் காட்டிக் கலங்கப்பண்ணுதல் . |
| இடியப்பம் | சிற்றுண்டிவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 104 | 105 | 106 | 107 | 108 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடியப்பம் முதல் - இடும்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பெயர், வரும், துன்பம், இடம், இடுகுறிப்பெயர், சங்கடம், உறுப்பு, கைப்பிள்ளை, சுருங்குதல், உண்டாகும், கவ்வும், தங்கம், நெருக்கம், பொருள், காண்க, வறுமை, இடுப்பு, சிற்றுண்டிவகை, ஒடுக்கம், சந்து

