தமிழ் - தமிழ் அகரமுதலி - வேயுள் முதல் - வேலைவைத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வேயுள் | மூடுகை ; மலர்கை ; வேய்ந்த மாடம் ; மேல்மாடி ; மாடம் . |
| வேர் | மரஞ்செடி கொடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்வதும் அவை உணவேற்க உதவுவதுமான அடிப்பகுதி ; மரவேர் ; மூங்கில் ; திப்பிலிவேர் ; வேர்போன்றது ; அடிப்படை ; காரணம் ; வியர்வை ; சினம் . |
| வேர்க்கடலை | நிலக்கடலை . |
| வேர்க்குரு | வேர்வையால் உண்டாகும் சிறு பரு . |
| வேர்க்கொம்பு | இஞ்சி ; சுக்கு . |
| வேர்கல்லுதல் | அடியோடு அழித்தல் . |
| வேர்த்தல் | வியர்த்தல் ; சினத்தல் ; அஞ்சுதல் . |
| வேர்த்துக்கொட்டுதல் | அதிகமாக வேர்வைநீர் வடிதல் . |
| வேர்ப்படலம் | கண்ணோயுள் ஒன்று . |
| வேர்ப்பலா | வேரில் காய்க்கும் பலாமரம் . |
| வேர்ப்பு | வியர்த்தல் ; சினம் . |
| வேர்ப்பூச்சி | வேரிலிருந்தபடி அதனைத் தின்று செடியைக் கெடுக்கும் பூச்சிவகை . |
| வேர்பொடித்தல் | வேர்வைநீர் அரும்புதல் . |
| வேர்வாசம் | இலாமிச்சை . |
| வேர்வு | காண்க : வேர்ப்பு . |
| வேர்வை | வியர்வை . |
| வேரகம் | கருப்பூரம் . |
| வேரம் | வெகுளி ; மஞ்சள் ; காண்க : அடப்பங்கொடி ; சேம்பு ; செய்குன்று ; கோபுரம் ; மேகக்கூட்டம் . |
| வேரல் | சிறுமூங்கில் ; மரவகை ; மூங்கிலரிசி ; வேர்க்கை . |
| வேரறுத்தல் | அறக்கெடுத்தல் . |
| வேரி | தேன் ; கள் ; மணம் ; காண்க : இலாமிச்சு(சை) ; ஓமாலிகை முப்பத்திரண்டனுள் ஒன்று . |
| வேரித்தண்டு | தேன்வைக்குங் குழாய் . |
| வேரூன்றுதல் | வேர்பதிதல் ; உறுதியாய்த் தொடங்கப்பெறுதல் . |
| வேரோடுதல் | காண்க : வேரூன்றுதல் . |
| வேல் | நுனிக்கூர்மையுடைய ஆயுதவகை ; திரிசூலம் ; ஆயுதப்பொது ; ஆயுதவகை ; முருகன்வேல் ; வெல்லுகை ; பகை ; மரவகை ; வெள்வேல் ; உடை ; மூங்கில் . |
| வேலசம் | மிளகு . |
| வேலம் | தோட்டம் . |
| வேலம்பாசி | பாசிவகை . |
| வேலன் | முருகன் ; முருகபூசை செய்பவன் ; வேல்காரன் . |
| வேலனாடல் | வேலன் ஆடும் கூத்து . |
| வேலாயுதன் | முருகன் . |
| வேலாவலயம் | கடல் ; பூமி . |
| வேலாழி | கடல் . |
| வேலி | விலங்குகள் பயிரை அழிக்காதபடி முள் முதலியவற்றால் அமைக்கும் பாதுகாப்பு ; மதில் ; காவல் ; நிலம் ; வயல் ; ஒரு நில அளவை ; பசுக்கொட்டில் ; ஊர் ; காண்க : முள்ளிலவு ; ஓசை ; காற்று ; கொடிவகை . |
| வேலிப்பருத்தி | உத்தாமணிக்கொடி . |
| வேலிபோடுதல் | கழி , கல் முதலியவற்றால் இடத்தைச் சூழத்தடுத்து வரம்பிடுதல் . |
| வேலியழித்தல் | காவலடைப்பை அழித்தல் ; வரம்புகடத்தல் . |
| வேலிறை | முருகக்கடவுள் . |
| வேலேறு | வேல்தைத்த புண் . |
| வேலை | தொழில் ; செயல் ; வேலைப்பாடு ; காண்க : வேலைத்திறன் ; உத்தியோகம் ; காலம் ; கடற்கரை ; கடல் ; அலை ; கானல் ; கரும்பு ; வெண்காரம் . |
| வேலைக்காரன் | ஊழியன் ; தொழிலாளி ; தொழில் ; வல்லவன் ; தந்திரம்பண்ணுபவன் ; வைக்கோல் தள்ளும் தடி . |
| வேலைக்காரி | பணிப்பெண் . |
| வேலைசெய்தல் | தொழிலில் ஈடுபடுதல் ; குறும்பு பண்ணுதல் ; சவரஞ்செய்தல் ; தந்திரஞ் செய்தல் . |
| வேலைத்தனம் | காண்க : வேலைத்திறன் . |
| வேலைத்தனம்பண்ணுதல் | வேலையில் திறமை காட்டுதல் ; குறும்புபண்ணுதல் ; விரகு செய்தல் . |
| வேலைத்திறன் | தொழில் செய்வதில் வல்லமை ; குறும்புச்செயல் . |
| வேலைநாணயம் | வேலையில் நேர்மை ; செய்யப்படும் வேலையின் மேம்பாடு . |
| வேலைநாள் | வேலையுள்ள நாள் . |
| வேலைநிறுத்தம் | வேலையின்றி இருத்தல் ; தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரே காலத்தில் நிறுத்துகை . |
| வேலைநேரம் | வேலை செய்வதற்குரிய காலம் ; வேலை செய்கின்ற வேளை . |
| வேலைப்பாடு | காண்க : வேலைத்திறன் . |
| வேலைமறியல் | ஒருவனை வேலை செய்ய வொட்டாமல் தடுத்தல் ; தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரே காலத்தில் நிறுத்தல் . |
| வேலையாள் | கூலிக்கு வேலைசெய்பவன் . |
| வேலையிற்றுயின்றோன் | பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால் . |
| வேலைவளர்த்தல் | வேலையை நீட்டித்தல் . |
| வேலைவாங்குதல் | பிறனை ஏவி வேலை செய்யும்படி செய்தல் . |
| வேலைவைத்தல் | வீண் வேலையிடுதல் ; ஒருவனைக் காணுதல் முதலியவற்றிற்கு நேரம் குறிப்பிடுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1007 | 1008 | 1009 | 1010 | 1011 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேயுள் முதல் - வேலைவைத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வேலை, வேலைத்திறன், தொழில், கடல், செய்தல், வேலையை, காலத்தில், முதலியவற்றால், வேலைப்பாடு, கூடிப்பேசி, காலம், தொழிலாளர், வேலையில், வேலன், அழித்தல், வியர்த்தல், சினம், வியர்வை, மூங்கில், வேர்வைநீர், ஒன்று, ஆயுதவகை, மாடம், வேரூன்றுதல், மரவகை, வேர்ப்பு, முருகன்

