முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வெறுநரையோர் முதல் - வேசியாடுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வெறுநரையோர் முதல் - வேசியாடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வெறுநரையோர் | முழுநரையுள்ள முதியவர் . |
| வெறுநுகம் | சோதிநாள் . |
| வெறுப்பு | அருவருப்பு ; சினம் ; பகைமை ; விருப்பமின்மை ; துன்பம் ; கலக்கம் ; அச்சம் ; செறிவு . |
| வெறும்பிலுக்கு | வீண்பகட்டு . |
| வெறும்புறங்கூற்று | அலர்மொழி . |
| வெறும்புறங்கூறல் | கோள்சொல்லுதல் ; அலர் தூற்றுதல் . |
| வெறும்புறம் | ஒன்றுமில்லாதிருக்கை ; காரணமின்மை . |
| வெறுமன் | வீண் . |
| வெறுமனே | வீணாக ; வேலையின்றி . |
| வெறுமனை | வீணாக ; வேலையின்றி . |
| வெறுமை | பயனின்மை ; அறியாமை ; வறுமை ; கலப்பின்மை . |
| வெறுமொருவன் | தனித்த ஒருவன் . |
| வெறுமொன்று | தனித்த ஒன்று . |
| வெறுவாய்க்கிலைகெட்டவன் | ஒன்றுமில்லாத வறியவன் . |
| வெறுவாயலட்டுதல் | வீண்பேச்சுப் பேசுதல் ; தற்பெருமை பேசுதல் ; பிதற்றுதல் . |
| வெறுவியர் | பயனற்றவர் . |
| வெறுவிலி | ஒன்றுமில்லாத வறியவன் . |
| வென் | வெற்றி ; முதுகு . |
| வென்றவன் | வெற்றிபெற்றவன் ; பற்றற்றுச் சித்தி பெற்றவன் ; அருகக்கடவுள் . |
| வென்றி | வெற்றி . |
| வென்றிக்கூத்து | மாற்றான் ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும் காட்டும் கூத்து . |
| வென்றிமாலை | போர்வென்றோர் சூடும் மாலை ; வெற்றியொழுங்கு . |
| வென்றியன் | காண்க : வென்றவன் . |
| வென்றோன் | வெற்றியடைந்தோன் ; புலனடங்கப்பெற்றோன் ; அருகக்கடவுள் . |
| வே | ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+ஏ) ; ஒற்று . |
| வேக்காடு | கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுதல் ; எறிதல் ; அழற்சி ; வெப்பம் ; பொறாமை . |
| வேக்காளம் | காண்க : வேக்காடு ; சினம் ; மனத்துயர் ; வெட்கம் . |
| வேகடம் | மணியின் அழுக்குப் போக்கல் ; விசித்திர வேலை ; இளந்தன்மை ; மீன்வகை . |
| வேகடன் | காண்க : வேகடி ; இளைஞன் . |
| வேகடி | மணியின் அழுக்குப் போக்குவோன் ; காண்க : வேகடம் . |
| வேகடை | மணியின் அழுக்குப் போக்குவோன் ; காண்க : வேகடம் . |
| வேகடைத்தாள் | காண்க : குருநாத்தகடு . |
| வேகப்புள் | கருடன் . |
| வேகம் | விரைவு ; விரைந்த நடை ; விசை ; வலிமை ; சினம் ; மனக்கலக்கம் ; கடுமை ; மலம் ; சிறுநீர் முதலியவற்றின் உணர்வு ; சுக்கிலம் ; நஞ்சு ; காண்க : நாற்றம் ; அடம்பு ; வெள்ளப்பெருக்கு ; கீழ் ; பரவுகை ; உடம்பு . |
| வேகர் | தூதுவர் . |
| வேகரம் | கடுமை ; உறைப்பு . |
| வேகவதி | மதுரையிலுள்ள வையையாறு ; காஞ்சியிலுள்ள ஆறு . |
| வேகவைத்தல் | சூட்டாற் பக்குவப்படுத்துதல் . |
| வேகாளம் | காங்கை ; வேக்காடு ; சினம் . |
| வேகி | வேகமுடையவர் ; சினமுடையவர் ; வஞ்சகமுடையவர் . |
| வேகித்தல் | விரைதல் ; சினத்தல் . |
| வேங்கடம் | திருப்பதி ; திருப்பதிமலை , வடமலை . |
| வேங்கியம் | குறிப்பு ; வெட்கம் . |
| வேங்கை | புலிவகை ; மரவகை ; ஒரு மலை ; ஒருநாடு ; பொன் . |
| வேசகம் | யானை வால்நுனி ; வால் ; குதிரையின் பிடரிமயிர் ; வீடு . |
| வேசதாரி | மாறுவேடம் பூண்டவர் ; வஞ்சக முடையவர் . |
| வேசம் | உடை முதலியவற்றால் கொள்ளும் வேற்று வடிவம் ; வாயில் ; வீடு ; சம்பளம் ; வேசையர் தெரு ; கடுமை ; காதணிவகை . |
| வேசரம் | ஒட்டகம் ; ஒரு தெலுங்குமொழி ; மனச்சோர்வு ; சிற்பவகை . |
| வேசரி | கழுதை ; கோவேறு கழுதை . |
| வேசறவு | மனச்சோர்வு ; துயரம் . |
| வேசறிக்கை | மனச்சோர்வு ; துயரம் . |
| வேசனம் | மருதநிலத்தூர் ; வீடு ; வாயில் . |
| வேசா | விலைமகள் . |
| வேசாடல் | மனக்கலக்கம் . |
| வேசாறல் | சோர்தல் ; துயரம் ; ஆறுகை ; களைப்பாறுகை . |
| வேசாறுதல் | களைப்பாறுதல் ; மனஞ்சோர்தல் ; ஆறுதல் ; துன்பம் அடைதல் . |
| வேசி | பரத்தை . |
| வேசிக்கள்ளன் | வேசியுறவுள்ளவன் . |
| வேசித்தனம் | பரத்தமை ; பிலுக்கு . |
| வேசியாடுதல் | கற்பொழுக்கந்தவறி நடத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1003 | 1004 | 1005 | 1006 | 1007 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெறுநரையோர் முதல் - வேசியாடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சினம், மணியின், வேகடம், அழுக்குப், கடுமை, துயரம், மனச்சோர்வு, வீடு, வேக்காடு, வேலையின்றி, தனித்த, மனக்கலக்கம், வாயில், வீணாக, துன்பம், கழுதை, போக்குவோன், வேகடி, வெற்றி, வென்றவன், வெட்கம், பேசுதல், ஒன்றுமில்லாத, வறியவன், அருகக்கடவுள்

